Guru Vedham

Guru Vedham

Sunday, December 25, 2016

நம்பிக்கையோடு இரு!


புலம்பாதே !

க்ருஷ்ணனின் தபால் 
📬
காலங்கள் மாறும்.
கவலைகள் மாறும்.
பிரச்சனைகள் மாறும்.
தேவைகள் மாறும்.
வியாதிகள் மாறும்.
விரோதங்கள் மாறும்.
சூழ்நிலை மாறும்.
சொந்தங்கள் மாறும்.
எண்ணங்கள் மாறும்.
கருஷ்ணன் மாறுவதில்லை.
அவன் அருளும் மாறுவதில்லை.
அதனால் மாற்றங்களை
நினைத்துப் புலம்பாதே !


குருஜீ கோபாலவல்லிதாசர்

Sunday, December 11, 2016

உன்னுள்ளே...

க்ருஷ்ணனின் தபால் 📬
உன்னுள் ஒரு உத்வேகம் உண்டு...
உன்னுள் ஒரு சக்தி உண்டு...
உன்னுள் ஒரு திறமை உண்டு...
உன்னுள் ஒரு தெளிவு உண்டு...
உன்னுள் ஒரு மகிழ்ச்சி உண்டு...
உன்னுள் ஒரு தீர்வு உண்டு...
உன்னுள்ளே எல்லாம் உண்டு...
உன்னுள்ளே தானே கண்ணனும் உண்டு...

குருஜீ கோபாலவல்லிதாசர்

Thursday, December 8, 2016

நம்பு...

📬 க்ருஷ்ணனின் தபால் 
📬
நம்பு...நல்லதே நடந்தது...
திடமாய் நம்பு...நல்லதே நடக்கிறது...
உறுதியாய் நம்பு...நல்லதே நடக்கும்...
நிம்மதி உன் கையில்….

குருஜீ கோபாலவல்லிதாசர்

Wednesday, December 7, 2016

கண்ணன் இருக்கிறான்...



 க்ருஷ்ணனின் தபால் 

📬
இந்த வாழ்வில் பிறவி ஒரு முறை... பிறந்துவிட்டோம்...
இந்த வாழ்வில் மரணம் ஒரு முறை...காத்திருக்கிறோம்...
இருப்பதோ இடைப்பட்ட காலத்தில்...வாழ்ந்துவிடுவோம்...
காக்கவோ இருக்கிறான் கண்ணன்...நம்பிவிடுவோம்…

குருஜீ கோபாலவல்லிதாசர்

Tuesday, December 6, 2016

ஹரியோடு நட !

க்ருஷ்ணனின் தபால் 
📬
ஹரி அறிவான் உன்னை !
ஹரி செய்வது சரியே !
ஹரி உன் அருகிலே !
ஹரி அறிவான் எல்லாம் !
ஹரியால் நடப்பதே உலகம் !
ஹரியை நினைத்து நீ நட !
ஹரியோடு நட !


குருஜீ கோபாலவல்லிதாசர்

Monday, December 5, 2016

கண்ணனையே நம்பு !

க்ருஷ்ணனின் தபால் 
📬
எந்த ஒரு நிகழ்வும், கண்ணனுக்கே தெரிந்து நடக்கிறது !
மனமே ! கண்ணனையே நம்பு !
கண்ணனைத் தவிர ஆத்மாவுக்காக இங்கு யாருமில்லை !

குருஜீ கோபாலவல்லிதாசர்