Guru Vedham

Guru Vedham

Friday, May 20, 2016

கண்ணன் அறிவான்...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
உன் பலம் கண்ணன் அறிவான்...
உன் பலவீனம் கண்ணன் அறிவான்...

அவனிடம் உன்னைத் தா...
உன் பலவீனங்கள் பலமாகும்...
உன் பலம் திடமாகும்...

உன்னை கவனித்து உன் வாழ்வை கண்ணன் நடத்துகிறான்…

குருஜீ கோபாலவல்லிதாசர்



Thursday, May 19, 2016

சொல்லிக் கொடுக்கிறான்...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா…

உன் வாழ்வை யாராலும் கெடுக்க முடியாது... உன்னைத் தவிர...
உன்னுள் இருந்து க்ருஷ்ணன் தெளிவாய் சொல்லிக் கொடுக்கிறான்...
கேட்டு நடந்தால் நல்லது...
மனிதரின் பெருமை பேச்சுக்களை நம்பி வீணானது போதாதோ !?!
இன்னும் ஏன் இந்த நம்பிக்கை மனிதரிடம் ?!?!
க்ருஷ்ணனை விட நல்லது செய்துவிடுவரோ உனக்கு வேண்டியவர்கள் ?!?!

குருஜீ கோபாலவல்லிதாசர்

Wednesday, May 18, 2016

கண்ணனை நினை...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா…

யாருக்கும் இங்கே உன்னைப் பற்றி பெரிய அக்கறையில்லை...
யாருக்கும் இங்கே உன்னைப் பற்றி யோசிக்க நேரமில்லை...
அதனால் மனிதரை நினைத்து ஏமாறாதே...
அதனால் மனிதரை நினைத்து புலம்பாதே...
அதனால் மனிதரை நினைத்துக் கொண்டிருக்காதே...

கண்ணனை நினை...
கண்ணனுக்குத் தான் உன் மேல் அக்கறை...
கண்ணன் மட்டும் தான் உன்னை மறப்பதேயில்லை…

குருஜீ கோபாலவல்லிதாசர்


Tuesday, May 17, 2016

உன் தேவை

க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
உன் உடலின் தேவை க்ருஷ்ணனின் ஆலிங்கனம்...
உன் மனதின் தேவை க்ருஷ்ணனின் தியானம்...
உன் வாழ்வின் தேவை க்ருஷ்ணனின் க்ருபை...
உன் குடும்பத்தின் தேவை க்ருஷ்ணனின் ஆசீர்வாதங்கள்...
உன் தேவை க்ருஷ்ணன் மட்டுமே…

குருஜீ கோபாலவல்லிதாசர்

Monday, May 16, 2016

காத்துக்கொள் !!!

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...

சிலருக்கு அடுத்தவரிடம் அழகாக காரியம் சாதித்துவிட்டு, கழற்றிவிட நன்றாகத் தெரியும் !!!
அவர்களிடம் நன்றியை எதிர்பார்த்தால் நீ முட்டாள் !!!
அவர்கள் உன்னை உபயோகித்துக்கொள்ள அனுமதித்தது உன் குற்றம் !!!

நாம ஜபம் செய்து, உன்னை உபயோகித்து வீசி எறிபவரிடம் இருந்து உடனே உன்னைக் காத்துக்கொள் !!!

குருஜீ கோபாலவல்லிதாசர்

கூடியிருந்து அனுபவி...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...

யாரும் உனக்கு எதிரியல்ல...
காலமும் சூழ்நிலையும் அவசரமும் தான் பல சந்தர்ப்பங்களில் மற்றவரோடு நமக்கு பிரச்சனைகள் உண்டாகிறது...
க்ருஷ்ணா என்று ஜபி...

இந்த உடலில் இருக்கும் வரை கூடியிருந்து பக்தியோடு வாழ்வை அனுபவி...

குருஜீ கோபாலவல்லிதாசர்

கைங்கர்யம் செய்ய வா!


கண்ணனுக்காக வாழ் !!!

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...

மற்றவர் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும் !!!
மற்றவர் என்ன வேண்டுமானாலும்
சொல்லட்டும் !!!

மற்றவருக்காக க்ருஷ்ணன்
உன்னைப் படைக்கவில்லை !!!

உனக்காகவும், அவனுக்காகவும்
உன்னைப் படைத்தான் !!!


நீ உனக்காக வாழ் !
உன் கண்ணனுக்காக வாழ் !!!


குருஜீ கோபாலவல்லிதாசர்

என் பொறுப்பு...


Thursday, May 12, 2016

புலம்பு ...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...

புலம்பவேண்டும் போலிருக்கிறதா ?!?
அப்படியென்றால் க்ருஷ்ணன் உனக்கு செய்த நல்லவைகளை நினைத்து புலம்பு ...
க்ருஷ்ணனின் நாமத்தைப் புலம்பு ...
க்ருஷ்ண பக்தர்களை நினைத்து புலம்பு...
இதையெல்லாம் விட்டுவிட்டு திரும்பத் திரும்ப அல்ப மனிதர்களை பற்றி ஏன் புலம்புகிறாய் ...
சீ... சீ... வெட்கமாயில்லை !!!

குருஜீ கோபாலவல்லிதாசர்

என் உலகம்!


உன் நினைவு...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
உன் நினைவுகள் தவறாக இருந்தாலும், மற்றவர்களால் உனக்குக் கஷ்டம் வரும்...
உன் நினைவு கண்ணனைப் பற்றியே இருந்தால், நிச்சயமாக உன்னை யாராலும் கஷ்டப்படுத்தவே முடியாது.
க்ருஷ்ண நாமத்தை விடாமல் ஜபி...
கண்ணன் உன் மனதில் நிறைந்திருக்கட்டும் !!!

குருஜீ கோபாலவல்லிதாசர்

Tuesday, May 10, 2016

ராமானுஜா... அகில குரோ பகவன் நமஸ்தே…


க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
ராமானுஜா என்னும் பெரிய நிதி உனக்காகவே...
ராமானுஜா என்னும் சூரியன் உனக்கு வழிகாட்டவே...
ராமானுஜா என்னும்
சந்திரன் உன்னை
குளிரவைக்கவே...

ராமானுஜா என்னும்
மேகம் உனக்கு கருணை
பொழியவே...

ராமானுஜா என்னும் ஓடம்
உன்னை வைகுந்தத்தில்
சேர்ப்பிக்கவே...

ராமானுஜா என்னும் நாமம்
உன் வாழ்க்கையின்
ஆனந்தத்திற்காகவே....

ராமானுஜா...
அகில குரோ
பகவன் நமஸ்தே…

குருஜீ கோபாலவல்லிதாசர்

Sunday, May 8, 2016

கண்ணனிடத்தில் உரிமை

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் கண்ணன் துல்லியமாக கவனிக்கிறான்...
உனது வாழ்வில் கண்ணன் தானே உரிமை எடுத்து எல்லாவற்றையும் செய்கிறான்...
நீ கண்ணனிடத்தில் உரிமையோடு ப்ரார்த்தனை செய்...

குருஜீ கோபாலவல்லிதாசர்

Saturday, May 7, 2016

நிம்மதி உன் கையில்…

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
உன்னால் கெட்டதை மறக்க முடியும் !!!
கெட்ட விஷயங்களை, மற்றவர் உனக்கு செய்த கெடுதல்களை மற....
நீ தான் மறக்கவேண்டும்...
மறந்தால் உனக்கு நல்லது...

க்ருஷ்ணன் உனக்கு செய்த நல்லவைகள் பலகோடி... அதை நினை...
நிம்மதி உன் கையில்…

குருஜீ கோபாலவல்லிதாசர்

Thursday, May 5, 2016

கொஞ்சம் சிரியேன்!


என்ன வேண்டும்?


யோசித்து பார் !!

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
நீ க்ருஷ்ணனிடத்தில் நன்றியோடு இருக்கிறாயா ?!?
எத்தனை தடவை நீ க்ருஷ்ணனை நீ வாயார திட்டியிருக்கிறாய் ?!?!
எத்தனை விஷயங்களில் நீ க்ருஷ்ணனை பூரணமாய் நம்பினாய் ?!?!
எத்தனை முறை நீ க்ருஷ்ணனை அவமானப்படுத்தினாய் ?!?!
யோசித்து பார் ?!?!
இத்தனை செய்த பிறகும் அவன் உன் மேல் வைத்த அன்பு குறைந்ததேயில்லை !!!
ஆனாலும் நீ ஒன்றும் அவனை புரிந்துகொள்ளவே இல்லை...
ஆனாலும் கண்ணனோ கருணா சாகரன்...
என்று உனக்குப் புரியும் ?!?!?

கோபாலவல்லிதாசர்

Tuesday, May 3, 2016

நிதானமாய் ஜபி…

ராதேக்ருஷ்ணா…

உன்னை பலரும் பல சந்தர்ப்பங்களில் தவறாக எண்ணுவர்.
அந்த சமயத்தில் நீ அமைதியாக இரு. காலம் உனக்காக அவர்களிடம் பேசும்.
உன் அவசரத்தால் நீயே உளறிக்கொட்டாதே.
நிதானத்தால் நீ மேன்மை தான் அடைவாய்.

க்ருஷ்ண நாமத்தை நிதானமாய் ஜபி…

குருஜீ கோபாலவல்லிதாசர்

மாற்று…


க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
மனதில் அழுத்தம் யாரால் ???
உன்னுடைய எதிர்பார்ப்பால்...
எது எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க நீ யார் ???
யார் எப்படி நடக்கவேண்டும் என்று முடிவு செய்ய நீ யார் ???
உன் மனதின் சக்தி உன்னை சரி செய்துகொள்ளத்தான் !!!
க்ருஷ்ணனை நினை...
நீ வாழும் முறையை மாற்று…

குருஜீ கோபாலவல்லிதாசர்

உணர்ந்துகொள்….

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
உன் அருமை உனக்குப் புரியவில்லை...
உலகின் எந்தப் பொருளும் உன்னை விட பெரியதல்ல...
வீடு, நிலம், பணம், தங்க நகைகள், வாகனங்கள், சொத்து எதுவுமே உன்னை விட பெரியதல்ல...
நீ உபயோகிக்க மட்டுமே அவை. இவைகளுக்கு நீ அடிமை அல்ல...
க்ருஷ்ண நாமத்தை ஜபி...
உன்னை உணர்ந்துகொள்….

குருஜீ கோபாலவல்லிதாசர்