Guru Vedham

Guru Vedham

Sunday, October 25, 2015

பக்த குலம்…

ராதேக்ருஷ்ணா…

குலத்தைப் பார்த்து க்ருஷ்ணன் அருள் செய்வதில்லை...
ப்ரஹ்லாதன் அசுர குலம்...
விபீஷணன் ராக்ஷஸ குலம்...
குகன் வேடுவ ஜாதி...
நாரதர் வேலைக்காரியின் பிள்ளை...
கோபிகைகள் மாடு மேய்க்கும் குலம்...
நம்பாடுவான் ஹரிஜன குலம்...

நீ இந்த பக்தர்களின் குலத்தில் உன்னை சமர்ப்பித்து விடு...
கட்டாயம் கண்ணன் உன்னைத் தேடி வருவான்...

இனி நீ பக்த குலம்…

பக்குவப்படுவாய்….


ராதேக்ருஷ்ணா

யார் எந்த விஷயத்தை எப்படிச் சொன்னாலும், நீ எல்லா விஷயங்களையும் நன்மையாகவேப் பார்....
உலகில் நன்மை இல்லாத சம்பவங்கள் நடப்பதில்லை...
உலகில் நன்மை இல்லாத ஒரு விஷயமும் இல்லை...
பாம்பின் விஷமும் மருந்தாகிறது...
முள்ளுச் செடியும் வேலியாகிறது...
உதிர்ந்த இலைகளும், அழுகிய காய்களும், பழங்களும் மண் உரமாகின்றன...
நன்மையைப் பார்க்க நீ ஆரம்பித்தால், உலகில் எங்கும் க்ருஷ்ண க்ருபையை நீ அனுபவிக்க முடியும்....
விடாமல் நாம ஜபம் செய்...
பக்குவப்படுவாய்….

க்ருஷ்ணா என்று ஜபி...


ராதேக்ருஷ்ணா

எல்லாவற்றிலும் க்ருஷ்ணன் ரகசியமாய், பூரணமாய் நிறைந்திருக்கிறான்...
மலரின் வாசமாக...
பழத்தின் சுவையாக...
விதையின் சக்தியாக...
மேகத்தில் மழையாக...
சூரியனின் வெப்பமாக...
நிலவின் குளிர்ச்சியாக...
உன்னுள் பசியாக...
பசிக்கு உணவாக...
உணவை ஜீரணிக்கும் சக்தியாக...
எங்கும் காற்றாக...
கேட்கும் ஒலியாக...
ஆணின் ஆண்மையாக...
பெண்ணின் பெண்மையாக...
குழந்தையின் தெய்வீகமாக...
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...
நீ அதை உணர்வாய்...
க்ருஷ்ணா என்று ஜபி...
உன்னால் உணர முடியும்…

கெடுத்துக்கொள்ளாதே...


ராதேக்ருஷ்ணா

உன் வாயினாலும், உன் எண்ணங்களாலுமே உனக்குப் பாதி பிரச்சனைகள் உண்டாகிறது... யாரையும் திருத்த நீ இங்கே வரவில்லை... எல்லா இடங்களிலும் உன் அறிவுரைகளையும், யோசனைகளையும் சொல்லிக்கொண்டிருக்காதே... எல்லோருக்கும் அறிவு உண்டு... எல்லோரும் யோசிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்... க்ருஷ்ணன் உன்னை சௌக்கியமாய் வைத்திருக்கிறான்... நீயே அதை கெடுத்துக்கொள்ளாதே…

ஆசீர்வாதங்கள்…


ராதேக்ருஷ்ணா

உனக்கு ஞானம் வர ஆசீர்வாதங்கள்...
உனக்கு பக்தி வர ஆசீர்வாதங்கள்...
உனக்கு வைராக்கியம் வர ஆசீர்வாதங்கள்...
உனக்கு ஆரோக்கியம் நிலைத்திருக்க ஆசீர்வாதங்கள்...
உனக்கு எல்லா விதமான நன்மைகளும் உண்டாக ஆசீர்வாதங்கள்...
உனக்கு க்ருஷ்ண தரிசனம் கிடைக்க ஆசீர்வாதங்கள்...
உன் குடும்பம் நன்றாயிருக்க ஆசீர்வாதங்கள்...
உங்கள் வீட்டு குழந்தைகள் நன்றாய் வாழ ஆசீர்வாதங்கள்...
உங்கள் குலம் என்றும் க்ருஷ்ணனின் சன்னிதியில் வாழ ஆசீர்வாதங்கள்...
இந்த மனித வாழ்வில் தினமும் க்ருஷ்ண தரிசனம் கிடைக்க ஆசீர்வாதங்கள்...
இந்த வாழ்வின் முடிவில் மோக்ஷம் கிடைக்க ஆசீர்வாதங்கள்....
என்றும் எப்போதும் எல்லா வளமும் நலமும் பெற்று நிம்மதியாய் வாழ பூரணமாய் ஆசீர்வாதங்கள்…

நன்றாய் வாழ்வோம்…


ராதேக்ருஷ்ணா

மலை மகள் பார்வதியும்,
அலை மகள் லக்ஷ்மியும்,
கலை மகள் சரஸ்வதியும்,
நம்மோடு,
நம் குடும்பத்தோடு,
நம் வம்சத்தோடு,
என்றுமிருக்க ஏது குறை நமக்கு ???
வீரமும்,
ஐஸ்வர்யமும்,
அறிவும்,
என்றும் நம்மிடத்தில் குறையாதிருக்க இந்த நவராத்திரியில் எல்லா ஆசார்யர்களும் நம்மை ஆசீர்வதிக்கட்டும்....
இந்துக்களே...
ஒன்றாய் சேர்வோம்....
இன்றே சேர்வோம்...
உலகிற்காக பிரார்த்தனை செய்வோம்....
எல்லோரும் நன்றாய் வாழ்வோம்…

Monday, October 19, 2015

அதிர்ஷ்டசாலி


ராதேக்ருஷ்ணா

உனக்கு க்ருஷ்ணனைத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் க்ருஷ்ணனுக்கு உன்னை நன்றாகவே தெரியும்....
நீ க்ருஷ்ணனை பார்க்க ஆசைப்படுகிறாயோ இல்லையோ, க்ருஷ்ணன் உன்னை எப்போதும் ஆசையோடு பார்த்துக்கொண்டேதான் இருக்கிறான்....
நீ எத்தனை பாக்கியசாலி என்பதை புரிந்துகொள்...
நீ எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை அறிந்துகொள்….

க்ருஷ்ணன் உன்னோடு...

ராதேக்ருஷ்ணா…

வாழ்க்கை பிரகாசிக்கட்டும்...
நம்பிக்கை அதானே எல்லாம்....
பிரார்த்தனை செய்ய எல்லோருக்கும் காரணம் உண்டு...
க்ருஷ்ணன் உன்னோடு...
வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும்…



நீங்காத இடம்...


ராதேக்ருஷ்ணா

மரியாதை தெரியாதவரிடத்தில் நீ உன்னைப் பாதுகாத்துக்கொள்....
உனக்கு மரியாதை தராதவரை நீ ஏன் உன் மனதில் ஒரு இடம் கொடுத்து வைத்திருக்கிறாய் ???
அது உன் தவறு தானே....
க்ருஷ்ணனோ உன்னை எப்போதும் மரியாதையோடு மட்டுமே நடத்துகிறான்....
அவனுக்கல்லவா உன் மனதில் நீங்காத இடத்தை நீ தரவேண்டும்…

நாம ஜபம் செய்…

ராதேக்ருஷ்ணா

உன்னை தெய்வங்கள் அனுபவிக்கவே நவராத்திரி...
மஹான்களும், தெய்வங்களும் உன்னோடு உன் வீட்டில் இப்போது ஆனந்தமாய் வசிக்கிறார்கள்...
எப்போதும் உன் வீட்டில் நிரந்தரமாய் இருக்கும்படி இப்போதே நாம ஜபம் செய்…

Thursday, October 15, 2015

எல்லாம் அவனிஷ்டம்



ராதேக்ருஷ்ணா…

நீ கண்ணன் உன்னை எந்த இடத்தில் எப்படி வைத்திருக்கிறானோ, அந்த இடத்தில் நிம்மதியாய், ஆனந்தமாய், அமைதியாய், தைரியமாய், அன்பாய், அழகாய், பொறுமையாய் வாழ்ந்துகொண்டிரு....
அவனே உன் வாழ்வை எப்படி நடத்தவேண்டுமோ, அப்படி நடத்துவான்...
நாமஜபம் செய்...
எல்லாம் அவனிஷ்டம் என்று விட்டுவிடு….


Wednesday, October 14, 2015

புதியதாய் வாழ்…


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கை ஒவ்வொரு நாளும் புதியதே...
ஒவ்வொரு சம்பவமும் புதியதே...
க்ருஷ்ணன் ஒவ்வொரு விடியலையும் புதியதாகவே தொடங்குகிறான்...
இனி நீயும் புதியதாய் வாழ்…


Tuesday, October 13, 2015

நன்றாகச் சாப்பிடு


ராதேக்ருஷ்ணா

உடல் களைப்பாயிருந்தால், தெம்பு மாத்திரை அல்லது தெம்பான ஆகாரம் சாப்பிட்டு சரி செய்வோமல்லவா...
அதே போல் மனம் களைத்துப்போனாலோ, அலுத்துப்போனாலோ, க்ருஷ்ண நாமஜபம் என்னும் சத்தான மருந்தை, ஆகாரத்தை நன்றாகச் சாப்பிட்டு சரி செய்து கொள்வாய்….

Monday, October 12, 2015

அனுபவி....


ராதேக்ருஷ்ணா

நவராத்திரியில் உன் வீட்டில் கொலுவிருக்க தெய்வங்களும், பக்தர்களும் பிரத்யக்ஷமாய் வந்திருக்கிறார்கள்...
கொண்டாடு...அனுபவி....
நிச்சயமாக உன்னால் உணர்ந்து அனுபவிக்க முடியும்...
பிரார்த்தனை செய்…

இன்றும் உனதே... நாளையும் உனதே…


ராதேக்ருஷ்ணா

உனக்கு மஹான்களின் ஆசீர்வாதத்திற்கு குறைவில்லை...
உனக்கு க்ருஷ்ணனின் அனுக்ரஹத்திற்கு குறைவில்லை...
பகவானுடைய நாமத்தை ஜபிக்க வாயிருக்கிறது...
க்ருஷ்ணனை நினைக்க மனம் இருக்கிறது...
முயற்சியை விடாதே...
நம்பிக்கையை இழக்காதே...
இன்றும் உனதே...
நாளையும் உனதே…

எல்லாமே நன்மைதான்...


ராதேக்ருஷ்ணா

உனக்கு நன்மைகளே அதிகம் நடந்திருக்கிறது...
சொல்லப்போனால் உனக்கு நடந்த எல்லாமே நன்மைதான்...
நீ மனதால் முதலில் எனக்கு நன்மைதான் நடந்தது, நடக்கிறது, நடக்கும் என்பதை பூரணமாக நம்பு...
வாழ்வின் பல கேள்விகளுக்கும், பிரச்சனைகளுக்கும் தானாய் பதில் கிடைக்கும்...
உன் கண்ணன் உன்னோடிருக்க உனக்கு நன்மையைத் தவிர வேறு என்ன நடக்கும் ??

குருவின் கடமை


ராதேக்ருஷ்ணா

உன்னிடம் உள்ள பெரிய குற்றங்கள் உனக்குப் பெரியதாகத் தெரியாது....
ஆனால் அடுத்தவரின் சிறிய குற்றங்கள் கூட உனக்குப் பெரியதாகத் தோன்றும்....
குரு உன்னுடைய எல்லா குற்றங்களையும் களைந்து, உன்னைப் பக்குவப்படுத்துகிறார்....
நீ உன் மேல் குற்றமில்லை என்று வாதாடினாலும், குரு அதையெல்லாம் காது கொடுத்து கேட்கமாட்டார்....
உனது குற்றத்தை சரி செய்வதே குருவின் கடமையாகக் கண்ணன் அவருக்கு சொல்லியிருக்கிறான்…

Thursday, October 8, 2015

க்ருஷ்ணனை நினைந்திரு…


ராதேக்ருஷ்ணா

உன் கூட வாழ்பவர்கள் உன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்று வருத்தப்படாதே....
நீ க்ருஷ்ணனை நினைத்துக்கொண்டு, எப்பொழுதும் நிதானமாக, தைரியமாக, அன்பாக, எல்லோரிடமும் வெறுப்பில்லாமல் பழகு....நீ க்ருஷ்ணனை அனுபவிப்பதுதான் முக்கியம்....
வெறுப்போ, கோபமோ, ஆதங்கமோ மனிதரிடம் வந்தால், அப்புறம் நீ அவர்களையே நினைந்திருப்பாய்....
உன்னை நினைக்கும் க்ருஷ்ணனை நினைந்திரு…

கவலை வேண்டாம்…


ராதேக்ருஷ்ணா

உன்னிடத்தில் கண்ணனுக்கு அக்கறை உண்டு....
உன் மீது கண்ணனுக்கு பூரண அன்பு உண்டு....
அதனால் உன்னைப் பற்றியோ, யாரைப் பற்றியும், எதைப்பற்றியும் கவலையே வேண்டாம்…

நிறைவேறும்....


ராதேக்ருஷ்ணா

உன் பிரார்த்தனை ஒரு நாளும் வீண் போகாது....
க்ருஷ்ணன் உன் பிரார்த்தனையை சிரத்தையோடு கேட்கிறான்....
நிச்சயமாக உன் பிரார்த்தனை ஒரு நாள் நிறைவேறும்....
எப்படி நடக்கும் என்று யோசிக்காதே....
கண்ணனால் முடியாதது எதுவுமில்லை….

Monday, October 5, 2015

இந்து தர்மம் ஜெயிக்கும்


ராதேக்ருஷ்ணா

எப்போதும் இந்து தர்மம் ஜெயிக்கும் என்று சொல்லு....
எப்போதும் பாரதம் உயர்ந்ததென்று சொல்லு...
எதிர்காலம் வருங்கால சந்ததிக்கு நன்மையே தரும் என்று நம்பு...
க்ருஷ்ணனின் அருளால் நம் தேசம் நன்றாகவே இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்...
முடிந்தால் நம்பிக்கை தரும் விஷயங்களை மட்டும் பேசு,கேள்....
இல்லையென்றால் தயவு செய்து உன் வாயை மூடிக்கொண்டு க்ருஷ்ணனின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, எல்லோருக்காகவும் நாம ஜபம் செய்....
அவநம்பிக்கை தரும் விஷயங்களை கேட்காதே...
பேசாதே.... பரப்பாதே…

Sunday, October 4, 2015

க்ருஷ்ணனின் அற்புதம்...


ராதேக்ருஷ்ணா

இயற்கை க்ருஷ்ணனின் அற்புதம்...
ஒரு நாளும் நீ இயற்கையைப் பழிக்காதே....
இயற்கை இல்லையென்றால் நீ இல்லை...
தாவரங்கள், விலங்குகள், பறவைகள், சிறு ஜந்துக்கள் எதுவுமே இயற்கையை அவமதிப்பதில்லை....
இயற்கையைக் கொண்டாடுவதே நம் இந்து தர்மம்... இயற்கையை ஒட்டியே நமது இந்து பண்டிகைகள்...
பச்சை மா மலையும் கண்ணன் மேனி, காக்கை சிறகும் கண்ணன் வண்ணம்....
நாம ஜபம் செய்....
இயற்கையில் உறையும் கண்ணன் உனக்குத் தெரிவான்....
வெயிலும் சுகமே...
மழையும் இதமே...
குளிரும் ஆனந்தமே…

ஒழுங்காக நாமஜபம் செய்....


ராதேக்ருஷ்ணா

நீ புலம்பும் அளவுக்கு உன் வாழ்வில் எந்தப் புயலும் வீசவில்லை....
நீ நம்பிக்கை இழக்கும் அளவுக்கு உனக்கு ஒரு கஷ்டமும் வரவில்லை....
நீ ரொம்பக் கஷ்டப்படுகிறாய் என்ற நினைப்புதான் உன்னை புலம்பவைக்கிறது....
ப்ரஹ்லாதன், மீரா மாதிரி எல்லாம் நீ ஒன்றும் கஷ்டப்படவில்லை....
அவர்களே அழகாக பக்தி செய்து கண்ணனை அனுபவித்தார்கள்...
உன் கஷ்ட புராணங்களை புலம்புவதை விட்டுவிட்டு ஒழுங்காக நாமஜபம் செய்….


Friday, October 2, 2015

கைவிடவேமாட்டான்....


ராதேக்ருஷ்ணா

உன் க்ருஷ்ணன் உன்னை கைவிட்டானோ என்ற எண்ணமே அபத்தம்....
நீயே அவனை விட்டாலும் அவன் உன்னை விடுவானோ?!?!?
தாயாரின் கர்ப்பத்தில் உன்னையும் கண்ணனையும் நீ அறியாத சமயத்தில் காத்தவனல்லவோ உன் கண்ணன்....
உன் கண்ணன் உன்னை ஒரு நாளும் எந்தக் காரணம் கொண்டும் உன்னை கைவிடவேமாட்டான்....
பைத்தியக்காரத்தனமாய் யோசிப்பதை கொஞ்சம் நிறுத்திக்கொள்ளேன்….

Thursday, October 1, 2015

ப்ருந்தாவனம் வாருங்கள்...


ராதேக்ருஷ்ணா

என்னையும் ப்ருந்தாவனத்தில் அனுமதித்த ராதிகா ராணிக்கு கோடி நமஸ்காரங்கள்...
என்னையும் ப்ருந்தாவனத்தில் தங்க வைத்த க்ருஷ்ணனுக்கு கோடி நமஸ்காரங்கள்...
என்னையும் ப்ருந்தாவனத்தின் லீலா ஸ்தலங்களை பார்க்க அனுமதித்த ஆசார்யர்களுக்கு பலகோடி நமஸ்காரங்கள்....
என்னையும் ப்ருந்தாவனத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்ட ப்ருந்தாவன வாசிகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்...
ஹே ப்ரிய பக்த ஜனங்களே,,,
ப்ருந்தாவனம் போலொரு க்ருஷ்ண லீலா ஸ்தலம் இதுவரை எங்குமில்லை...
இனியுமில்லை...
சீக்கிரம் ப்ருந்தாவனம் வாருங்கள்...
கண்ணனுக்கு ப்ரியமானவைகளை, ப்ரியமானவர்களைப் பாருங்கள்….