Guru Vedham

Guru Vedham

Monday, August 31, 2015

கண்ணனின் ஆனந்தம்....


ராதேக்ருஷ்ணா

நீ கொடுக்கும் எதுவாக இருந்தாலும் அது க்ருஷ்ணனுக்கு உயர்ந்ததே...
ஏனெனில் அவன் உன்னை நேசிக்கிறான்...
அவன் உன் அன்பை மதிக்கிறான்...
உன் பந்தத்தை கொண்டாடுகிறான்....
இது தானே கண்ணனின் ஆனந்தம்....
இது போதுமே உன் வாழ்க்கையை நிம்மதியாய் வாழ…

Sunday, August 30, 2015

மெனக்கெடுகிறான்…


ராதேக்ருஷ்ணா

விடாமல் நாம ஜபம் செய்...
மஹான்களை எப்போதும் நினை...
நிச்சயம் நீயும் மஹாத்மாவாகலாம்...
அதற்காகவே கண்ணன் மெனக்கெடுகிறான்…

யோசித்து வை....

ராதேக்ருஷ்ணா…

ஒவ்வொரு நாளும் இங்கே விசேஷமே...
பலராமன் பிறந்துவிட்டார் இன்று....
இதோ சீக்கிரம் கண்ணன் உன் வீடு தேடி வருகிறான்....
கோகுலாஷ்டமிக்கு, ஸ்ரீக்ருஷ்ண ஜயந்திக்கு என்ன தரப்போகிறாய் உன்னைத் தேடி வரும் கண்ணனுக்கு ?!?!

யோசித்து வை....
என்னவெல்லாம் தரப் போகிறாய் ?!?!?
என்னவெல்லாம் கண்ணனிடமிருந்து வாங்கிக்கொள்ளப் போகிறாய் ?!?!?

Friday, August 28, 2015

நினைவு

ராதேக்ருஷ்ணா…

மீனைப் பார்த்தால், மத்ஸ்ய பகவானை நினை....
ஆமையைப் பார்த்தால், கூர்ம பகவானை நினை...
பன்றியைப் பார்த்தால், வராஹ பகவானை நினை...
சிங்கத்தைப் பார்த்தால்,
நரசிம்ம பகவானை நினை...

குள்ளரைப் பார்த்தால்,
வாமன பகவானை நினை...

கோடாரியைப் பார்த்தால்,
பரசுராமரை நினை...

வில்லைப் பார்த்தால், ஸ்ரீராமனை நினை...
ஏர்கலப்பையைப் பார்த்தால், பலராமனை நினை...
மாடுகளைப் பார்த்தால், கண்ணனை நினை...
குதிரையைப் பார்த்தால்,
ஹயக்ரீவரை நினை...

நினைவுக்கு பலம் உண்டு...
ஒரு நாள் நினைவெல்லாம் கண் கூடாய் தெரியும்….

Thursday, August 27, 2015

வாமனனின் திருவடி காக்கும்…

ராதேக்ருஷ்ணா…

நாளை திருவோணம்...
வாமனனின் பிறந்தநாள்...

உலகை அளந்தவன் உன்னைத் தேடி உன் வீட்டிற்கு ஏதோ ஒரு விதத்தில் வரப்போகிறான்...
அந்த வாமனனிடம் நீ உன்னையும், உன் வாழ்வையும், உன் குடும்பத்தையும், உன் வம்சத்தையும், பூரணமாய் தந்துவிடு....
இனி கவலையில்லாமல் இரு.... வாமனனின் திருவடி என்றும் என்றென்றும் உன் தலையில், உன் வீட்டில், உன் குடும்பத்தில், உன் வம்சத்தில் இருக்கும்...
வாமனனின் திருவடி காக்கும்….

ஆசீர்வாதங்கள்….


ராதேக்ருஷ்ணா….

உன்னுடைய அவமானம், கண்ணனின் அவமானம்...
உன்னுடைய நஷ்டம்,
கண்ணனின் நஷ்டம்...
உன்னுடைய பிரச்சனை,
கண்ணனின் பிரச்சனை...
உன்னுடைய தோல்வி,
கண்ணனின் தோல்வி...
உன்னுடைய துன்பம்,
கண்ணனின் துன்பம்...
அதனால் இதை எல்லாம் சரி செய்து உன்னை வாழவைப்பது அவன் வேலை....
உன் மனதில் சாந்தியும், நிம்மதியும் உண்டாக ஆசீர்வாதங்கள்….

Tuesday, August 25, 2015

தடுக்காமல் இரு


ராதேக்ருஷ்ணா….

உனக்காக கண்ணன் யோசிக்கிறான்....
உன் எதிர்காலத்தை அழகாக திட்டமிடுகிறான்...
உன் தேவைகளை தகுந்த சமயத்தில் தர உனக்காக, கண்ணன் சேமித்து வைக்கிறான்....
உன் மனதின் காயங்களுக்கு, உனக்குத் தெரியாமல் மருந்திட்டு சமாதானம் தருகிறான்....
உன்னுள்ளிருந்து உனக்கு ஒவ்வொன்றையும் உனக்குப் புரியும்படி சொல்லித்தருகிறான்....
உன்னைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குகிறான்....
கொஞ்சம் நீ கண்ணனைத் தடுக்காமல் இருந்தால் போதும்….

Monday, August 24, 2015

அது போதும்….


ராதேக்ருஷ்ணா….

நீ தூங்கும்போதும் உன் கடமைகளில் முக்கால்வாசிக்கு மேல் கண்ணன் செய்துவிடுகிறான்...
நீ இளைப்பாறும் போதும், கண்ணன் இளைப்பாறாமல் உன் வாழ்வை நடத்திக்கொண்டிருக்கிறான் ....
நீ கண்ணனை நம்பி வாழ்வாய்...அது போதும்….

கேள்...கேள்...கேள்...


ராதேக்ருஷ்ணா….

உன்னுள்ளே ஒளிந்திருக்கும் கண்ணன், உன்னை அழகாய் வழி நடத்துகிறான்....
நீ நிதானமாய் அவன் உன்னுடன் பேசுவதை கவனி...
சத்தியமாய் கண்ணன் உன்னோடு பேசிக்கொண்டே இருக்கிறான்....
விடாமல் நாம ஜபம் செய்...
அப்போது கண்ணனின் குரல் உன்னுள்ளே கேட்கும்....
உலகில் மிகவும் அழகாக, அக்கறையாக, ஆசையாக, உரிமையாக, உள்ளன்போடு உன்னோடு பேசும் ஒரு குரல் கண்ணனுடையதே....
கேள்...கேள்...கேள்...
இப்போதுகூட உன்னொடு பேசுகிறான்….

புரிந்துகொள்….


ராதேக்ருஷ்ணா…..

உன்னுடைய ஒவ்வொரு தவறையும், க்ருஷ்ணன் இதுவரை மன்னித்திருக்கிறான்....
அதுதான் அவனுடைய மனது....
இதுவரை யாருடைய தவறுக்கும் அவன் தண்டனை கொடுத்ததே கிடையாது....
க்ருஷ்ணன் உன்னை தவறுகளிலிருந்து மீட்கிறானே ஒழிய, உன்னைத் தண்டித்து, அவனுக்கென்ன 
ஆகப்போகிறது ???
க்ருஷ்ணனின் கருணையை புரிந்துகொள்….

மனதில் உறுதி வேண்டும்...


ராதேக்ருஷ்ணா….

மனதில் உறுதி வேண்டும்...
பிரச்சனைகளில் தளராத, மனதில் உறுதி வேண்டும்...
வியாதிகளில் கலங்காத, மனதில் உறுதி வேண்டும்...
நம்பிக்கை துரோகங்களில் வீழாத, மனதில் உறுதி வேண்டும்...
தோல்விகளில் துவளாத, மனதில் உறுதி வேண்டும்...
எதிர்பாராத தருணங்களில், மனதில் உறுதி வேண்டும்....
எல்லாமே இழந்த நிலையிலும், மனதில் உறுதி வேண்டும்....
எல்லோருமே ஒதுக்கி வைத்த சமயத்திலும், மனதில் உறுதி வேண்டும்...
கண்ணன் என்னும் கருந்தெய்வம் உன்னுள் என்றும் உறுதியாக இருக்க, உன் மனதில் உறுதிக்கு 
ஒரு குறைவுண்டோ ....
மனதில் உறுதியோடு வாழ்...
உயிர் போகும் போதும், மனதின் உறுதி நிற்க….

கோமாதா


ராதேக்ருஷ்ணா

கோபாலன் நேசித்த கோமாதாவை நமஸ்காரம் செய்...
கோவிந்தன் தொழுத கோமாதாவை காப்பது உனது கடமை...
கோமாதா உனக்கு நன்மையே செய்பவள்...
கோமாதா நேரே நடமாடும் தெய்வம்...
உன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் கோசாலைகளுக்கு செய்வாய்...
கோமாதாவிற்கு ஒரு பிடி புல் போடு...
கோமாதாவிற்கு நீயும் ஒரு குழந்தை என்பதை நினைவில் வை....
கோமாதா உனக்காகவே பூமியில் வாழ்கிறாள்...
நீ போனாலும் உன் வம்சத்தை தன் வாஞ்சையால் காப்பவள் கோமாதா...
கோமாதா நம் குலமாதா…

நல்லதையே நினை...


ராதேக்ருஷ்ணா….

பக்தர்களின் மனதில் தோன்றும் விஷயங்களை கண்ணன் கூர்ந்து கவனித்து நடத்திக்காட்டுக்கிறான்..
பக்தர்கள் சொல்லும் வார்த்தைகளை சத்தியமாக்க கண்ணன் சங்கல்பம் செய்திருக்கிறான்...
அதனால்
நல்லதையே நினை...
நல்லதையே பேசு...
உன்னை தன் பக்தராக மட்டுமே கண்ணன் பார்க்கிறான்….


Tuesday, August 18, 2015

க்ருஷ்ணனின் வேலை...


ராதேக்ருஷ்ணா….

க்ருஷ்ணனுக்கு வேறு வேலையே இல்லையா???
கஷ்டப்பட்டு உன்னை சோதனை செய்து பார்க்க???
யாராவது எதையாவது சொன்னால் அப்படியே நம்புவதா????
உனக்கு அருள் செய்வது மட்டும் தான் க்ருஷ்ணனின் வேலை...
அருளை அனுபவிக்கவே நீ வந்திருக்கிறாய்….

Monday, August 17, 2015

மனதால் நினை...


ராதேக்ருஷ்ணா….

உன்னால் பிரச்சனைகளை ஜெயிக்க முடியும்....
புலம்பாதே....க்ருஷ்ணனை மனதால் நினை...
அவன் தான் உன்னோடு இருக்கிறானே....
அவனே உனக்குப் பிரச்சனைகளை வெல்லும் வழி
 சொல்லுவான்....தைரியமாய் நாமஜபம் செய்....
மாறும்....மாற்றித்தருவான்....உன்னையும் உன் குடும்பத்தையும் 
காப்பதைத் தவிர கண்ணனுக்கு வேறு ஒரு முக்கிய வேலையும் இல்லை…

Sunday, August 16, 2015

க்ருஷ்ணனை நினை


ராதேக்ருஷ்ணா….

மனிதர்களின் கெட்ட குணங்களை ஆராயாதே...
அதை நினைத்து நினைத்து உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காதே...
மற்றவரின் மோசமான செய்கையும், கெட்ட நடத்தையும் உன்னைப் பாதிக்காமல் இருக்க, 
நீ நிறைய க்ருஷ்ண நாம ஜபம் செய்.... 
க்ருஷ்ணனை நினைப்பது சுகமா ???
மனிதரின் கெட்ட செய்கைகளை நினைப்பது சுகமா ???
உன் மனது க்ருஷ்ணனை நினைப்பதற்காகவே படைக்கப்பட்டது….

Saturday, August 15, 2015

திருவாடிப்பூரம்

இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்...
குன்றாத வாழ்வாக வைகுந்த வான்போகம்
தன்னை இகழ்ந்து ஆழ்வார் திருமகளாராய்.

க்ருஷ்ணா என்று ஜபி....


நீ ஏன் புலம்புகிறாய்???
மனிதரிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்தது உன் குற்றம்....
அடுத்தவர் உன்னை ஏமாற்றவும், உபயோகித்துக் கொள்ளவும் அனுமதித்தது உன் மனதின் நம்பிக்கை தூரோகம்....
ஏமற்றியது அடுத்தவரல்ல...
ஏமாற்றியது உன் மனது...
க்ருஷ்ணா என்று ஜபி....
உனக்கே புரியும்….

எல்லாம் மாறும்….

ராதேக்ருஷ்ணா….

எல்லோருமே பிரச்சனையின் காரணத்தையும், பிரச்சனையையும் ஆராய்கிறார்கள்....
யாரோ சிலரே பிரச்சனைக்கான தீர்வை க்ருஷ்ணனிடம் கேட்கிறார்கள்....
எல்லா பிரச்சனைகளுக்கும் ஆதி காரணம் நீ பிறந்தது தான்...
இனி பிறவாமலிருக்கும் கதியைத் தரும் க்ருஷ்ணனிடம் மனதைத் தா...
" பிறந்துவிட்டேன் க்ருஷ்ணா... என்னைக் காப்பாற்று " என்று பிரார்த்தனை செய்....
எல்லாம் மாறும்….

Thursday, August 13, 2015

கிளம்பிவிடு...


ராதேக்ருஷ்ணா….

இங்கு எதையும் பிடித்துக்கொண்டு காலத்தை கடத்தாதே....
எப்போது கண்ணன் கூப்பிட்டாலும் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு,
 உன் வீடான வைகுந்தத்தைப் பார்க்கக் கிளம்பிவிடு...
வைகுந்தத்தில் வசிக்கும் நாளை நினைத்துக்கொண்டு இங்கே வாழ்…

ப்ரார்த்தனை செய்....

ராதேக்ருஷ்ணா....
உன் க்ருஷ்ணனிடம் இப்போதே ப்ரார்த்தனை செய்....
" க்ருஷ்ணா... நீ பெருமைப்படும்படியாக அடியேன் வாழவேண்டும்...

க்ருஷ்ணா... நீ சந்தோஷப்படும்படி அடியேன் வாழவேண்டும்...
க்ருஷ்ணா... உனக்குத் தொந்தரவில்லாதபடி அடியேன் வாழவேண்டும்...
க்ருஷ்ணா... உன் ஆசைப்படியே அடியேன் கடமைகளை செய்யவேண்டும்....
க்ருஷ்ணா... உன்னை எல்லோரும் கொண்டாடும்படி அடியேன் மோக்ஷம் அடையவேண்டும்....
க்ருஷ்ணா... உன்னிஷ்டப்படி மட்டுமே அடியேன் வாழவேண்டும்...
என்றும்...எப்போதும்…

கண்ணனோடு வாழ்…


வெளிமுகமாய் மனம் திரும்பினால் குழப்பமும், பயமும்....
உள்முகமாய் மனம் திரும்பினால் கண்ணனும், நிம்மதியும்...
யாரோடும் உனக்கு பகையில்லை....
யாரும் உனக்கு போட்டியில்லை....
உடலிருக்கும் வரையிலும் கண்ணனோடு நிம்மதியாய் வாழ்...
உடல் முடிந்தபின்னும் நிரந்தரமாய் கண்ணனோடு வாழ்…

க்ருஷ்ணனின் பொறுப்பு....


ராதேக்ருஷ்ணா….

உன்னைப் பற்றி நீ கவலைப்படத்தேவையில்லை...
உன் வாழ்வைப் பற்றி நீ யோசிக்க வேண்டியதில்லை...
உன் எதிர்காலத்தைப் பற்றி நீ கவலைப்பட வேண்டியதில்லை....
எல்லாம் க்ருஷ்ணனின் பொறுப்பு....
க்ருஷ்ணன் ரொம்ப பொறுப்பானவன்....
கொஞ்சம் நம்பித்தான் பாரேன்….

Sunday, August 9, 2015

உபயோகமானதே...


ராதேக்ருஷ்ணா….

உலகில் உள்ள ஒவ்வொன்றும் உபயோகமானதே...
தண்டமாய் பிரயோஜனமில்லாமல், எதுவுமில்லை... யாருமில்லை...
யாரையும், எதையும் குறைத்து மதிப்பிடாதே....
காய்ந்து உதிர்ந்த இலையும் உரமே....
க்ருஷ்ணன் காரணமில்லாமல் எதையும், யாரையும் படைக்கவில்லை….

அவன் பார்த்துப்பான்…


ராதேக்ருஷ்ணா....
நீ சில சமயங்களில் தெரியாமல் தவறு செய்திருப்பாய்....
பல சந்தர்ப்பங்களில் தெரிந்தே தவறு செய்திருப்பாய்....
அதை நினைத்து இப்போது குற்ற உணர்ச்சியில் நொந்துபொகாதே....
எல்லாவற்றையும் கண்ணனிடம் சொல்லிவிடு....
உன்னுடைய பாபங்களையும், குற்ற உணர்ச்சிகளையும், துக்கத்தையும் கண்ணனிடம் சமர்ப்பணம் செய்துவிடு....
அவன்தான் கீதையில் "என்னிடம் சரணடை..நான் உன்னை அனைத்துப் பாவங்களிலிருந்து விடுவிக்கிறேன்... வருந்தாதே" என்று சொல்லியிருக்கிறான்....
இனி அவன் பார்த்துப்பான்…

Thursday, August 6, 2015

கண்ணனுக்குத் தெரியும்...


உன் உழைப்பு கண்ணனுக்குத் தெரியும்...
உன் முயற்சி கண்ணனுக்குத் தெரியும்...
உன் தாபம் கண்ணனுக்குத் தெரியும்....
உன் வாழ்வில் உன்னை முன்னேற வைப்பது உன் கண்ணனின் லட்சியம்…

சும்மாயிரு….


க்ருஷ்ணன் உன்னைப் பற்றிதான் எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறான்...
அதனால் தான் உன்னுள்ளிருந்து புதிது புதிதாக விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறான்..
உனது சுகமே அவன் சுகம்...
உனது நிம்மதியே அவன் நிம்மதி...
அதனால் நீ அனாவசியமாக யோசிக்காமல் சும்மாயிரு….

உனக்கென்ன குறைச்சல்?


ராதேக்ருஷ்ணா….

உனக்கென்ன குறைச்சல்?
உன்னை வாழவைக்க க்ருஷ்ணன் மெனக்கெடுகிறான்....
உனக்கு ஒத்தாசை செய்ய குரு இருக்கிறார்…

அவனறிவான்....


ராதேக்ருஷ்ணா….

உன்னையும் என்னையும் இந்த உலகிற்கு அனுப்பு முன், நமக்குத் தேவையான எல்லாவற்றையும் தயார் செய்து வைத்தவன் க்ருஷ்ணன்....
நம்முடைய கடைசி யாத்திரை வரைக்கும் எல்லாம் தருவான் கண்ணன்....
இறுதி யாத்திரை வரை தருபவன், இப்போது கைவிடுவானா என்ன ???
நீ உன் கடமையை மட்டும் செய்...மற்றவை எல்லாம்
அவனறிவான்....

Monday, August 3, 2015

ரகசியமாக…

ராதேக்ருஷ்ணா….

உனக்காகவே ஒரு நண்பன்... க்ருஷ்ணன்...என்றென்றும்..
உன்னையே நினைத்து ஒரு தோழன்... க்ருஷ்ணன்...நிரந்தரமாக...
உன்னுள்ளேயே ஒரு சகா...
க்ருஷ்ணன்...ரகசியமாக…

சந்தோஷப்படு….


ராதேக்ருஷ்ணா….

நினைக்காதது நடந்தால் கவலை ஏன்????
க்ருஷ்ணன் உன்னை அதைப் பற்றி நினைத்து இத்தனை நாள் வருத்தப்படாமல் இருக்கும்படியாக பார்த்துக்கொண்டானே என்று சந்தோஷப்படு….

புது தலையெழுத்து…


ராதேக்ருஷ்ணா….

குரு இருப்பதால் ஜெயிப்பது, உன் தலையெழுத்து....
குரு இருப்பதால் க்ருஷ்ணன் உனக்கு அருள் செய்வது, அவன் தலையெழுத்து....
குரு இருப்பதால், விதி உன் காலில் விழுவது, அதன் தலையெழுத்து....
குருவே சரணம்...
குருவே உன் புது தலையெழுத்து…

குரு க்ருபை


ராதேக்ருஷ்ணா….

விடிந்தால் குரு பூர்ணிமா...
உனக்காகவே உன் குரு இந்த உலகில் வாழ்கிறார்....
உனக்காகவே உன் குருவை க்ருஷ்ணன் இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்....
உனக்காகவே உன் குரு மெனக்கெடுகிறார்....
உனக்காகவே உன் குரு பகவான் க்ருஷ்ணனிடம் ப்ரார்த்தனை செய்கிறார்....
நீ உன் குரு சொல்வதை மட்டும் கேள்...அது போதும்...
இந்த வாழ்வில் வாழ குரு க்ருபை உனக்கு போதும்.

குரு என்னும் கப்பல்


ராதேக்ருஷ்ணா….

குரு என்னும் கப்பல் உன்னை ஜாக்கிரதையாக சம்சார சாகரத்தை தாண்டவைத்துவிடும்....
குரு என்னும் கப்பல் உன்னை க்ருஷ்ணன் என்னும் கரையில் பத்திரமாக சேர்த்துவிடும்....
குரு என்னும் கப்பல் அஹம்பாவம் என்னும் முதலையிடமிருந்து உன்னை பாதுகாக்கும்....
குரு என்னும் கப்பல் உன்னை துன்பம் என்னும் திமிங்கிலத்தின் வாயில் விழாமல் காக்கும்...
குரு என்னும் கப்பல் உனக்காக உன் கண்ணனால் அனுப்பப்பட்டது....
உன்னை சுமக்கவே குரு என்னும் கப்பல் இருக்கிறது….

பக்குவப்படு….


ராதேக்ருஷ்ணா….

குரு உன்னை பகவானுக்குப் பிடித்தார் போல் பக்குவப்படுத்துகிறார்...
பகவான் க்ருஷ்ணன் தன் இஷ்டப்படி உன்னை அனுபவிப்பது போல் வேறு என்ன பாக்கியம் உலகில் உண்டு....
அதனால் பக்குவப்படு….