Guru Vedham

Guru Vedham

Monday, June 29, 2015

புரிந்து கொள்


ராதேக்ருஷ்ணா

நீ சொல்லி யாரும் கேட்கபோவதில்லை...
எதற்காக உன் நேரத்தையும், புத்தியையும் வீணடிக்கிறாய்....
க்ருஷ்ணன் எல்லோரையும் திருத்துவதில் கெட்டிக்காரன்... நீ யாரையும் திருத்த இங்கே வரவில்லை...
க்ருஷ்ணனை புரிந்து கொள்ளவே நீ இங்கே வந்திருக்கிறாய்…

Sunday, June 28, 2015

தெய்வாம்சத்தை பார்...


ராதேக்ருஷ்ணா…
உலகம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக சொல்லும்...நீ அதையெல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாதே...
எல்லோரிடமும் இருக்கும் தெய்வாம்சத்தை மட்டும் பார்...க்ருஷ்ணன் இல்லாத இடமோ, பொருளோ, மனிதரோ இல்லவேயில்லை….

Saturday, June 27, 2015

உன்னை நினைத்து...


ராதேக்ருஷ்ணா

உன்னை நினைத்து கண்ணன் வாழ்கிறான். அவன் உன்னை நினைத்துக்கொண்டிருப்பதை நினைத்து நீ பரபரப்பில்லாமல், சௌக்கியமாய், சமாதானமாய் வாழ்வாய்…

Friday, June 26, 2015

வெறுத்ததில்லை…


ராதேக்ருஷ்ணா….

பல ஆயிரம் தடவை நீ க்ருஷ்ணனை மறந்திருக்கிறாய்...
ஆனால் இதுவரை க்ருஷ்ணன் உன்னை ஒரு தடவை கூட
உன்னை மறந்ததில்லை... உன்னை திட்டினதில்லை...
உன்னிடம் கோபித்துக் கொண்டதில்லை...
உன்னை வெறுத்ததில்லை…

Thursday, June 25, 2015

ஒரு நாள் புரியும்…


ராதேக்ருஷ்ணா

நீ பக்தனே/பக்தையே...
இதில் உனக்கு சந்தேகமே வேண்டாம்....
க்ருஷ்ணன் உன்னை பக்தையாக, பக்தனாகவே பார்க்கிறான்....
நிச்சயமாக ஒரு நாள் உனக்கு இது புரியும்….

Wednesday, June 24, 2015

க்ருஷ்ணனைத் தவிர...

ராதேக்ருஷ்ணா...
எல்லாம் தெரிந்துவிட்டால் மனதில் சமாதானம் வந்துவிடுமா ???

ஒன்றும் தெரிந்துகொள்ளவேண்டாம்...க்ருஷ்ணனைத் தவிர...
மனது நிம்மதியாய் இருக்கும்…

கலங்காதே...


ராதேக்ருஷ்ணா….

நீ க்ருஷ்ணனைப் பார்க்கவில்லை என்று கலங்காதே...
அவன்தான் எப்போதும் உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறானே....
அதனால் ஒரு நாள் அவனே உன்னைத் தன்னைப் பார்க்கும்படி செய்வான்….


Tuesday, June 23, 2015

பிடித்துக்கொள்...


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பார்... இன்று அன்போடு இருப்பவர், நாளை விரோதியாகலாம்...
நேற்று நம்மிடம் சண்டை போட்டவர், இன்று நம்மை புரிந்துகொள்ளலாம்....
அதனால் மனிதரை வெறுக்கவோ, கொண்டாடவோ அவசியமில்லை....
அவரவர் எப்படி இருக்கிறாரோ, அப்படியே ஏற்றுக்கொள்....
க்ருஷ்ணன் ஒரு நாளும் மாறுவதேயில்லை....
அவனை பூரணமாய் நம்பு...
அவனைப் பிடித்துக்கொள்…

Monday, June 22, 2015

சரணடை...


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனால் முடியாதது யாராலும் முடியாது...
எவருக்கும் முடியாதது க்ருஷ்ணனால் சுலபமாய் முடியும்...
உன் வாழ்வை மாற்றும் பலம் க்ருஷ்ணனிடம் பூரணமாய் உள்ளது....
சரணடை...மாற்றிக்கொள்…

தைரியமாய் இரு…


ராதேக்ருஷ்ணா

யாரோடு இந்த பூமிக்கு வந்தாய் ???
க்ருஷ்ணனோடு கையைப் பிடித்துக்கொண்டு வந்தாய்...
அவன் உன்னைப் பிடித்துக்கொண்டு இந்த வாழ்க்கையில் அழைத்துச் செல்கிறான்...
ஒரு நாளும் உன் கையை அவன் விடவேமாட்டான்...
அதனால் வாழ்வில் தைரியமாய் இரு…

வாழ்வில் வெல்வாய்…


ராதேக்ருஷ்ணா...
உன் பூர்வ ஜன்ம கர்ம வினை உன்னை கீழே தள்ளினாலும், உன் க்ருஷ்ணன் உன்னைக் கட்டாயம் தன் கைகளில் தாங்கிடுவான்... கலங்காதே...
உன்னைக் கண்ணன் தன் நெஞ்சில் ஜாக்கிரதையாய் வைத்திருக்கிறான்...
நீ வாழ்வில் வெல்வாய்…

வித்தியாசமாகப் படைத்திருக்கிறான்….


ராதேக்ருஷ்ணா...
எல்லோருக்கும் எல்லோரிடமும் ஒத்துப்போகாது...
ஒவ்வொருவரும் யோசிக்கும் விதம் வித்தியாசமானது...
உனக்கு ஒத்து வரவில்லை என்பதற்காக அடுத்தவர் செய்வதெல்லாம் தவறாகிவிடாது....
க்ருஷ்ணன் ஒவ்வொருவரையும் வித்தியாசமாகப் படைத்திருக்கிறான்….

இளைப்பாறு…


ராதேக்ருஷ்ணா


மனதின் பாரத்தை க்ருஷ்ணனிடம் தா...
மனதின் குழப்பத்தை க்ருஷ்ணனிடம் தா...
மனதின் சந்தேகங்களை க்ருஷ்ணனிடம் தா...
மனதின் கவலைகளை க்ருஷ்ணனிடம் தா...
மனதின் பயங்களை க்ருஷ்ணனிடம் தா...
நீ க்ருஷ்ணனின் திருவடி நிழலில் இளைப்பாறு…

கருணையை மட்டும் பேசு…


ராதேக்ருஷ்ணா

உன் உள்ளம் உயர்ந்ததாய் இருக்கட்டும்... 
யாரைப் பற்றிய குற்றம் குறைகளையும் யாரிடமும் ஒரு நாளும் பேசாதே....
க்ருஷ்ணனின் கருணையை மட்டும் பேசு….

உன்னோடு இருக்கிறான்…

ராதேக்ருஷ்ணா...
உன்னால் தீர்வு காண முடியும் என்பதால்தான் பிரச்சனைகள் வருகிறது...

உன்னால் ஜெயிக்க முடியும் என்பதால் தான்
கஷ்டங்கள் வருகிறது...

உன்னால் மாற்றிக்காட்ட முடியும் என்பதால் தான் தோல்விகள் வருகிறது...
உன்னால் வாழ முடியும் என்பதால் தான் வாழ்க்கை இன்னும் இருக்கிறது...
உன்னால் எல்லாம் முடியும் என்று உனக்குக் காட்டவே உன் க்ருஷ்ணன் உன்னுள்ளே உன்னோடு இருக்கிறான்…

விதையாய் இரு...


ராதேக்ருஷ்ணா...
மண்ணுக்குள் விதைத்த விதையை முளைக்க வைக்கும் க்ருஷ்ணனுக்கு, உன் வாழ்வை நிர்வகிக்கத் தெரியாதா ?!?
நீ விதையாய் இரு...
உன்னை வளர்க்கவேண்டியது க்ருஷ்ணனின் பொறுப்பு…

பக்தி செய்...



ராதேக்ருஷ்ணா

நீ பக்தி செய்...
நீ விடாமல் நாமஜபம் செய்...
நீ க்ருஷ்ணனை நம்பு...
மற்றதை எல்லாம் க்ருஷ்ணன் கவனித்துக்கொள்வான்....
உன் பக்தியை வளர்ப்பது க்ருஷ்ணனின் வேலை...
உனக்கு தரிசனம் தருவது க்ருஷ்ணனின் கடமை...
உன் மனதை சரி செய்வது க்ருஷ்ணனின் பொறுப்பு

நிர்பந்திக்காதே...


ராதேக்ருஷ்ணா...
எல்லாவற்றையும் நீயே முடிவு செய்துவிட்டு, ப்ரார்த்தனையால் க்ருஷ்ணனை நிர்பந்திக்காதே...
உனக்கான வாழ்வை அவன் முடிவு செய்ய, நீ தடையாக இல்லாமல் இரு…

தைரியமாய் இரு….


ராதேக்ருஷ்ணா....
உனக்கான வாழ்க்கை க்ருஷ்ணனால் தீர்மானிக்கப்பட்டது...
உனக்கான பொறுப்புகள் க்ருஷ்ணனால் தீர்மானிக்கப்பட்டது....
உனக்கான தேவைகள் க்ருஷ்ணனால் நடக்கும்...
நீ சுகமாய் நிம்மதியாய் தைரியமாய் இரு….

மறப்பதேயில்லை…


ராதேக்ருஷ்ணா...

உன்னை மற்றவர் மறந்தாலும் க்ருஷ்ணன் மறப்பதேயில்லை...
உன்னை நீயே மறந்தாலும், க்ருஷ்ணன் மறப்பதேயில்லை…

மஹாத்மாக்களை நினை...


ராதேக்ருஷ்ணா….

மஹாத்மாக்கள் நம்மை விட்டுப் பிரிவதேயில்லை...
மஹாத்மாக்களை நாம் எந்த சமயத்தில் தியானித்தாலும் அனுக்ரஹம் செய்கிறார்கள்...
உயிருள்ளவரை மஹாத்மாக்களை நினை...
மஹான்களின் திருவடியே நமக்கு க்ருஷ்ணனைக் காட்டிக்கொடுக்கும்…

உன்னோடு இருக்கிறான்....


ராதேக்ருஷ்ணா

உயர்வு வரும்... தாழ்வு வரும்...
லாபம் வரும்... நஷ்டம் வரும்...
இதெல்லாம் ஒரு விஷயமில்லை....
எல்லாவற்றிலும் உன் க்ருஷ்ணன் உன்னோடு இருக்கிறான்....
அதனால் உன்னால் எல்லாவற்றையும் சமமாக ஏற்கவும், வாழ்ந்துகாட்டவும் முடியும்….

நல்ல வாழ்க்கை



ராதேக்ருஷ்ணா

உன் மனம் போல் ஒரு வாழ்க்கை அமையவில்லை என்ற கவலையே வேண்டாம். உனக்கு மிக நல்ல வாழ்க்கையையே கண்ணன் கொடுத்திருக்கிறான். கண்ணன் உனக்கு ஒரு நாளும் கேவலமான ஒன்றை தரவே மாட்டான்...
உனக்கு மிக உயர்ந்ததை கண்ணனைத் தவிர யாரும் தரவே முடியாது

நிரந்தர உறவு


ராதேக்ருஷ்ணா….

உன்னுடைய நிரந்தர உறவு கண்ணனே....
எந்த உறவு நீங்கினாலும் கண்ணன் உன்னை நீங்கமாட்டான்...
எந்த உறவு உன்னை ஏமாற்றினாலும் கண்ணன் உன்னை ஏமாற்றமாட்டான்...
உன் உறவை மதிப்பவனும் ரசிப்பவனும் கண்ணனே..

காதலிக்கிறான்...

ராதேக்ருஷ்ணா

உன்னை நினைப்பதே கண்ணனுக்கு சுகம்...
கண்ணன் உன்னை நினைக்காத நாளில்லை....
கண்ணன் உன்னை கவனிக்காத நேரமில்லை...
கண்ணன் உன்னை காதலிக்கிறான்....


விடாமல் நாம ஜபம் செய்...


ராதேக்ருஷ்ணா

நீ துருவனாக வேண்டுமா???
விடாமல் நாம ஜபம் செய்....
நீ ப்ரஹ்லாதனாக வேண்டுமா???
விடாமல் நாம ஜபம் செய்....
நீ வேதவ்யாசராக வேண்டுமா???
விடாமல் நாம ஜபம் செய்...
நீ யசோதா மாதாவாக வேண்டுமா???
விடாமல் நாம ஜபம் செய்...
நீ கோபியாக
வேண்டுமா???
விடாமல் நாம ஜபம் செய்...
உன் தகுதியை யோசிக்காதே...
உன் பலவீனத்தை யோசிக்காதே....
நாமஜபம் உன் தாய்....
நிச்சயம் அவள் உன்னைக் காப்பாள்....
நாமஜபம் உன்னை க்ருஷ்ணனிடம் அழைத்துச்செல்லும்…

அழியாத செல்வம்


ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணன் என்னும் அழியாத செல்வம் உன்னுடனேயே என்றும் எப்போதும் இருக்கிறது...
அதனால் நீ ஒரு போதும் ஏழை என்று எண்ணாதே...
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களான துருவன், ப்ரஹ்லாதன், ராமானுஜர், ராகவேந்திரா, ஆண்டாள், மீரா, விவேகானந்தர் போன்றவர் வரிசையில் நீயும் இருக்கிறாய்…

கண்ணனுக்காக வாழ்ந்து வா...


ராதேக்ருஷ்ணா….

உன்னை ஒரு நாளும் கண்ணன் அவமதித்ததில்லை...
உன்னை என்றும் மரியாதையோடு நடத்துபவன் உன் கண்ணனே...
உன் குறைகளை, குற்றங்களை ஒரு நாளும் அடுத்தவரிடத்தில் சொல்லாதவன் உன் கண்ணனே...
அதனால் அவன் உன் வாழ்க்கையை, உன்னை கொண்டாடுகிறான்....
உன் கண்ணனுக்காக வாழ்ந்து வா....உன் வாழ்க்கையின் மஹிமை உனக்குப் புரியும்….

குறையில்லாமல் பார்த்துப்பான்….

ராதேக்ருஷ்ணா...
உன் உடலில் குறை இருக்கலாம்...ஆனால் உன்னுள் இருக்கும் க்ருஷ்ணன் பூரணமானவன்....
உன் குடும்பத்தில் குறை இருக்கலாம்...ஆனால் உன்னுள் இருக்கும் க்ருஷ்ணன் பூரணமானவன்....
உன் காரியங்களில் குறை இருக்கலாம்...ஆனால் உன்னுள் இருக்கும் க்ருஷ்ணன் பூரணமானவன்....
உன் புத்தியில் குறை இருக்கலாம்... ஆனால்
உன்னுள் இருக்கும் க்ருஷ்ணன் பூரணமானவன்...

உன் பக்தியில் குறை இருக்கலாம்... ஆனால் உன்னுள் இருக்கும் க்ருஷ்ணன் பூரணமானவன்...
அவன் உன்னோடுதான் இருப்பான்... இது போதாதா உனக்கு....
அவன் குறைவில்லாதவன்...
உன்னைக் குறையில்லாமல் பார்த்துப்பான்….

உன்னோடுதான் இருப்பான்....


ராதேக்ருஷ்ணா

நீ என்றும் தனியில்லை...
உன்னை விட்டு க்ருஷ்ணனால் நிம்மதியாக இருக்கவே முடியாது... நீ எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், உன் க்ருஷ்ணன் உன்னோடுதான் இருப்பான்....
உன் க்ருஷ்ணன் உன்னோடு இருப்பதையே ஆனந்தமாய் நினைக்கிறான்…

சாத்தியமே….

ராதேக்ருஷ்ணா

பொறுமையோடு பக்தி செய்தால், எதுவும் சாத்தியமே....
விடாது நாமஜபம் செய்தால், எல்லாம் சாத்தியமே....
க்ருஷ்ணனிடம் சரணாகதி செய்தவருக்கு எப்பொழுதும் சாத்தியமே...
குருவால் அனுக்ரஹிக்கப்பட்டவருக்கு, முழுதும் சாத்தியமே….



சமர்த்தன்…


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொருவரையும் நீ திருத்த முயன்றால், உனக்கு பைத்தியம் பிடித்துவிடும். யாரையும் நீ திருத்த முயற்சிக்காதே... உனக்கு வேண்டியவரை திருத்தும் பொறுப்பை கண்ணனிடம் விட்டுவிட்டு நீ தைரியமாய் நம்பிக்கையோடு நாமஜபம் செய்.... அவன் யாரையும் திருத்துவதில் சமர்த்தன்…

தற்பெருமை


ராதேக்ருஷ்ணா....
சிலருக்கு தற்பெருமை அதிகம். ஆனால் அது அவர்களுக்கே துன்பம் தரும் என்பதை அறிவதில்லை... எல்லா பெருமையும் க்ருஷ்ணனுக்கு மட்டும் என்று நினைப்பவருக்கு தற்பெருமையே வராது.... க்ருஷ்ணன் தானே நம்மை நல்லவை செய்ய வைக்கிறான்…

குருவை அடைவாய்…


ராதேக்ருஷ்ணா….

குரு சொல் கேள்...
குரு சொன்ன நாமம் ஜபி...
குரு ரூபம் தியானம் செய்...
குரு காட்டும் வழியில் செல்.
குருவாலே தான் நீ க்ருஷ்ணனை அடைவாய்...
க்ருஷ்ணனால் தான் நீ குருவை அடைவாய்…

பொறுமையாயிரு….


ராதேக்ருஷ்ணா...
உன் ப்ரார்த்தனையில் குறை இருந்தாலும், கண்ணன் செய்யும் அனுக்ரஹத்தில் ஒரு குறையுமில்லை. அவன் உனது ஒவ்வொரு ப்ரார்த்தனைக்கும் காலமறிந்து அருள் செய்கிறான்....ப்ரார்த்தனை செய்துவிட்டு பொறுமையாயிரு….

க்ருஷ்ணனின் க்ருபை...


ராதேக்ருஷ்ணா….

நீ அனுபவிக்கும் எல்லா நன்மையும் க்ருஷ்ணனின் க்ருபை...
நீ அனுபவிக்கும் எல்லா துன்பமும் உன் கர்மவினை...
உன் கர்மவினை உன் வாழ்வை பாதிக்காமலிருக்க ஒரே வழி க்ருஷ்ணனின் திருவடிகளில் சரணடை....
உன் கர்மவினையை ஒரு நொடிப்பொழுதில் மாற்றி உன் கைப்பிடித்து உன்னோடு கண்ணன் நடப்பான்…

Sunday, June 21, 2015

நீங்காத தனம்


ராதேக்ருஷ்ணா

உன் முயற்சியை செய்...
உன்னால் முடியும்...
உன் மனம் பலத்தின் சுரங்கம்...
நீ எடுக்க எடுக்க உன் மனம் நல்லனவெல்லாம் தரும்...
உன் க்ருஷ்ணன் உன் தனிச்சொத்து...
என்றும் உன்னை விட்டு நீங்காத தனம் அவனே…

ஜகத்குரு


ராதேக்ருஷ்ணா...
ராமானுஜன் என்னும் ஜகத்குரு உன்னோடு இருக்கிறார்...
ராமானுஜா என்னும் பலமுடைய நாமம் உன் நாவில் இருக்கட்டும்..
ராமானுஜா என்னும் கருணைக்கடல் உன் பாவங்கள் அனைத்தையும் கழுவி உன்னை பரிசுத்தமாக்கிவிடும்...
நீ பகவான் க்ருஷ்ணனை அடைவது உறுதி….

புரியவைக்கிறான்….



ராதேக்ருஷ்ணா...
சில சமயங்களில் நாம் அறியாமல் அஜாக்கிரத்தையாக இருந்துவிடுகிறோம்... அதனால் சில நஷ்டங்களும், கஷ்டங்களும் நம் வாழ்வில் நடப்பதுண்டு... அதற்காக நொந்துபோகாதே... துவண்டுவிடாதே...
வாழ்வில் சில பாடங்கள் இப்படித்தான்... க்ருஷ்ணனை நம்பு... அவன் எல்லாவற்றையும் சரி செய்வான்... மாற்றித்தருவான்...
உன் அனுபவம் உன் க்ருஷ்ணன் தந்ததே... உன்னை உனக்கு அவனே புரியவைக்கிறான்.

சரணாகதியில்….


ராதேக்ருஷ்ணா...
உன் பலம் உன்னுடைய க்ருஷ்ணன்...
உன் சொத்து உன்னுடைய குரு...
உன்னுடைய வெற்றி நீ செய்யும் நாமஜபத்தில்...
உன் வாழ்க்கை நீ க்ருஷ்ணனிடம் செய்த சரணாகதியில்….