Guru Vedham

Guru Vedham

Monday, March 30, 2015

மறவாதே.


ராதேக்ருஷ்ணா


ஊரார் என்னவேண்டுமானாலும் சொல்லட்டும்...
உலகம் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும்...
உற்றார் ஒத்துக்கொள்ளாமல் போகட்டும்...
உன் க்ருஷ்ணனை ஒரு போதும் ஒதுக்காதே. மறவாதே.


கண்ணனை இழக்காதே…


ராதேக்ருஷ்ணா....
கண்ணனுக்காக எதையும் யாரையும் இழக்கலாம்....
ஆனால் எதற்காகவும் யாருக்காகவும் கண்ணனை இழக்காதே…


க்ருஷ்ணன் தீர்மானிக்கட்டும்…


ராதேக்ருஷ்ணா

உன் கடந்த காலம் உன் முதுகுக்கு பின்னால் ஒளிந்து இருக்கிறது... அதை ஏன் கஷ்டப்பட்டு திரும்பிப்பார்க்கிறாய்....
உன் கடந்த காலம் சொல்லித்தந்ததை மட்டும் கேள்....
நிகழ்காலத்தில் உன் க்ருஷ்ணன் உன்னோடு இருப்பதை உணர்ந்து உற்சாகமாய் வாழ்....
எதிர்காலத்தை உனக்காக உன் க்ருஷ்ணன் தீர்மானிக்கட்டும்…


கைவிடுவதில்லை...


ராதேக்ருஷ்ணா

உன் அகம்பாவம் உனக்கு நல்லது செய்ததில்லை...
உன் பக்தி உனக்கு கெடுதல் செய்ததில்லை...
உன் ஆசைகள் உன்னை நிம்மதியாக விடுவதில்லை...
உன் நாம ஜபம் உன்னை ஆசைகளில் விழவிடுவதில்லை....
உன்னை யாரும் உள்ளபடி நேசிப்பதில்லை...
உன்னை உள்ளபடி அறிந்தாலும் க்ருஷ்ணன் உன்னைக் கைவிடுவதில்லை…


ஏன் யோசிக்கிறாய் ?!?


ராதேக்ருஷ்ணா

உனக்கு என்ன தேவை என்று கண்ணனுக்குத் தெரியாதா?!?
உனக்கு எது நல்லது என்று க்ருஷ்ணனுக்குத் தெரியாதா?!?
அட பைத்தியமே....இந்த கொஞ்ச நாள் உலக வாழ்க்கைக்காக இப்படி ஏன் யோசிக்கிறாய் ?!?


விசேஷமான பிறவி


ராதேக்ருஷ்ணா

எல்லோருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. நீயும் விசேஷமான பிறவி. உனக்கும் உன் க்ருஷ்ணன் ஒரு விசேஷமான தனித்தன்மையைத் தந்திருக்கிறான்... அதனால் நீ யாருடைய வாழ்வோடும் உன் வாழ்வை ஒப்பிடாதே.... உன் வாழ்வை உன் க்ருஷ்ணன் அழகாய் திட்டமிட்டு நடத்துகின்றான்…


சரணாகதி

ராதேக்ருஷ்ணா...
யாரும் உன் வாழ்வை மாற்றமுடியாது... க்ருஷ்ணனைத் தவிர...
யாரும் உன் மனதை ஏமாற்ற முடியாது... உன்னைத் தவிர...
எதுவும் உன்னைக் காக்கமுடியாது... நாமஜபத்தைத் தவிர....
எதுவும் சுலபமில்லை...சரணாகதியைத் தவிர…


Sunday, March 22, 2015

கண்ணனின் லக்ஷியம்....


ராதேக்ருஷ்ணா

உன்னைக் காப்பதை தன் கடமையாக கண்ணன் செய்கிறான்...
உனக்கு வேண்டியதைக் கொடுப்பதை தன் பொறுப்பாக கண்ணன் கொண்டுள்ளான்...
உன்னை வாழ்வில் உயர்த்துவதே கண்ணனின் லக்ஷியம்....
அதனால் நிம்மதியாய் வாழ்வாய்….


குழப்பம் எங்கே!?!


ராதேக்ருஷ்ணா

கண்ணன் இங்கே கவலை எங்கே !?!
குரு இங்கே குழப்பம் எங்கே!?!
நாமஜபம் இங்கே பிரச்சனை எங்கே ?!?
சரணாகதி இங்கே கர்மவினை எங்கே !?!


உள்ளபடி அறிவான்…



ராதேக்ருஷ்ணா

உன்னை எல்லோரும் வெளியிலிருந்து பார்க்கிறார்கள்....ஆனால் உன் க்ருஷ்ணனோ உன்னை உன்னுள் இருந்து பார்க்கிறான்....  எல்லோரும் உன் நடவடிக்கைகளைப் பார்க்கின்றார்....
உன் க்ருஷ்ணனோ உன் நடவடிக்கைகளின் உண்மையான காரணத்தைப் பார்க்கிறான்....
அதனால் உன் க்ருஷ்ணனே உன்னை உள்ளபடி அறிவான்

க்ருஷ்ணனே உண்டு…


ராதேக்ருஷ்ணா


உன் பெயர் உன்னுடைய உடலுக்குதான்....
உன் வயதும் உன் உடலுடையதே...
உன் சொந்தங்களும் உன் உடலுக்கே...
உன் உடலோடு இதெல்லாம் அழியும்....
ஆனால் உடலிருக்கும்போதும், உடல் அழிந்தபின்னும் உனக்காக உன் க்ருஷ்ணனே உண்டு…


திருவனந்தபுரம் ஆகட்டும்…


ராதேக்ருஷ்ணா ….

உன் மனம் ப்ருந்தாவனம் ஆகட்டும்...
உன் உடல் ஜகந்நாத புரி ஆகட்டும்...
உன் புத்தி குருவாயூர் ஆகட்டும்...
உன் வாழ்க்கை திருவனந்தபுரம் ஆகட்டும்…


நிரந்தரமானவன்...


ராதேக்ருஷ்ணா 

எதுவும் நிலையில்லை...
அதனால் உன் துக்கங்களும் நிலையில்லை...
எதுவும் நிரந்தரமில்லை...
அதனால் உன் பிரச்சனைகளும் நிரந்தரமில்லை...
எதுவும் ஸ்திரமில்லை...
அதனால் உன் தோல்விகளும் ஸ்திரமில்லை...
க்ருஷ்ணனே நிரந்தரமானவன்...அதனால் உன் ஆனந்தமும் நிம்மதியும் பக்தியும் என்றும் நிரந்தரமானது…


வித்தியாசம் தெரியும்…


ராதேக்ருஷ்ணா ....
நீ ஒன்றும் அறியாத க்ருஷ்ண குழந்தை என்று நினைத்துக்கொள்...உன் வாழ்க்கை தானாக க்ருஷ்ணன் இஷ்டப்படி அழகாக நடக்கும்... கொஞ்சம் உன் மூளையை கசக்காமல் விட்டுவிடு.... அது பாவம்... இப்போது நீ ஒன்றும் தெரியாத குழந்தை என்று நினை... உடனேயே உன் மனதில் வாழ்வில் வித்தியாசம் தெரியும்…


நிதானம் பிரதானம்….


ராதேக்ருஷ்ணா 

எதையும் அவசரமாய் தீர்மானிக்காதே.... 
நிதானம் பிரதானம்…. மனிதர்கள் அபிமானிகள்...
எல்லோரின் செயலையும் கவனி.... ஆனால் அது எதுவும் உன் மனதை பாதிக்காமல் பார்த்துக்கொள்... எல்லோரும் பைத்தியமே... ஆத்திரத்தில் அவசரத்தில் பயத்தில் ஆர்வக்கோளாரில் எதையாவது செய்து பின் புலம்புவார்கள்.... நீ க்ருஷ்ணனின் குழந்தையாய் அவன் அரவணைப்பில் எல்லாவற்றையும் வேடிக்கை பார்….


கொடுத்துவிட்டோம்…

ஜெய் நரசிம்மா….

நம் மனதை அச்சுறுத்தும் அசுரர்களை ஜ்வாலா நரசிம்மன் கிழிக்கட்டும்...
நம் ஹ்ருதய குகையில் அஹோபில நரசிம்மன் செஞ்சு லக்ஷ்மியோடு குடிகொள்ளட்டும்...
நம் மனதில் மாலோலன் ஆசார்யனோடு நிரந்தரமாய் சஞ்சாரம் செய்யட்டும்...
நம் இந்திரியங்களை விஷய சுகங்களிலிருந்து க்ரோட (வராஹ) நரசிம்மன் மீட்கட்டும்...
நம் நேரத்தை ஆஞ்சநேயனுக்கு அனுக்ரஹித்த காரஞ்ச நரசிம்மன் எடுத்துக்கொள்ளட்டும்...
நம் குணங்களை பரசுராமனுக்காய் வந்த பார்கவ நரசிம்மன் பார்த்துக்கொள்ளட்டும்...
நம் யோகத்தையும், ஆனந்தத்தையும் யோகானந்த நரசிம்மன் தீர்மானித்துக்கொள்ளட்டும்...
நம் நாமஜபத்தையும், ப்ரார்த்தனையையும் சத்ர வட நரசிம்மன் கேட்டுக்கொள்ளட்டும்...
நம்மை பாவத்தை அழித்து, பவித்திர பக்த ப்ரஹ்லாதனாக மாற்றும் காரியத்தை பாவன நரசிம்மன் செய்துகொள்ளட்டும்....
நாம் அஹோபிலத்திற்கு நம்மை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டோம்…


மந்திர உபதேசம் தா...


ராதேக்ருஷ்ணா ...

ஹே நரசிம்மா...
என்னுள் இருக்கும் அகம்பாவம் என்னும் இரண்யகசிபுவை அழித்து, என்னையும் ப்ரஹ்லாதனாக மாற்றிவிடு...
ப்ரஹ்லாதா...என்னையும் உன் தோழனாக ஏற்றுக்கொள்... எனக்கும் மந்திர உபதேசம் தா….


ஆசையாய் செய்...


ராதேக்ருஷ்ணா 

உன் முயற்சியை ஒழுங்காக செய்... அதன் பலன் கண்ணன் இஷ்டம்... நிச்சயமாக கண்ணன் உனது முயற்சிகளை ரசிக்கிறான்...மதிக்கிறான்...உதவிசெய்கிறான்…. பிறகு என்ன யோசனை… எல்லா முயற்சியையும் ஆசையாய் செய்…


உன் கடமை..

ராதேக்ருஷ்ணா 

நீ தெளிவாக இருந்தால் யாரும் உன்னை குழப்பமுடியாது... நீ குழம்புவது உன் தவறு... அடுத்தவர் மேல் ஏன் ஏமாற்று பட்டம் சுமத்துகிறாய்… நாமஜபம் செய்து உன்னை தெளிவாக வைத்துக்கொள்வது உன் கடமை... நீ ஏமாறாமல் இருக்க க்ருஷ்ணன் உனக்கு உதவி செய்வான்....



நிம்மதியாய் வாழ்…


ராதேக்ருஷ்ணா 

யார் வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லை....
எந்த வீட்டில் வியாதி இல்லை...
யாருக்கு பிரச்சினைகள் இல்லை...
எந்த ஜீவனுக்கு தோல்வியோ நஷ்டமோ இல்லை....
இந்த பூமியில் இதையெல்லாம் தாண்டி க்ருஷ்ணனின் அனுக்ரஹம் கொட்டிக் கிடக்கிறது...
அதை மட்டும் பெரிதென நினைத்து நிம்மதியாய் வாழ்…


ஆசைப்படு…


ராதேக்ருஷ்ணா 


உனக்கு எதிலும் ஆசையில்லை என்று உன் வாய் சொல்லலாம்... ஆனால் உன் மனசு உனக்கும் தெரியும்; உன் கண்ணனுக்கும் தெரியும்.... ஆசைப்படு...தப்பில்லை....
க்ருஷ்ணனுக்கு எதையெல்லாம் நீ அனுபவித்தால் சந்தோஷமோ அதற்கெல்லாம் ஆசைப்படு…


தொலைத்துவிடாதே…


ராதேக்ருஷ்ணா 

எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்காதே.... உன் குடும்பமாகவே இருந்தாலும், ஒரு எல்லையைத் தாண்டாத வரை உனக்கு மரியாதை உண்டு... உனக்கு க்ருஷ்ணனோடு வாழவே நேரம் இருக்கிறது... எதை எதையோ மனதில் ஏற்றிக்கொண்டு க்ருஷ்ணானுபவத்தைத் தொலைத்துவிடாதே….



Saturday, March 21, 2015

உன்னாலும் முடியும்….


ராதேக்ருஷ்ணா ...
ப்ரஹ்லாதனால் நாமஜபம் செய்து, நரசிம்மனைப் பார்க்க முடியுமென்றால் உன்னால் முடியாதா ???
கோபிகைகளால் ப்ரேமபக்தியினால் கண்ணனோடு ராசம் ஆட முடியுமென்றால் உன்னால் முடியாதோ ???
உன்னாலும் முடியும்….


குறையொன்றுமில்லை....


ராதேக்ருஷ்ணா 

நாமஜபம் இருக்க குறையொன்றுமில்லை....
குரு க்ருபை இருக்க குறையொன்றுமில்லை...
பக்தி மனதில் இருக்க குறையொன்றுமில்லை...
விடாமுயற்சி இருக்க குறையொன்றுமில்லை...
க்ருஷ்ணன் என்றும் கூட இருக்க ஒரு நாளும் குறையொன்றுமில்லை….


அமைதியாயிரு...


ராதேக்ருஷ்ணா 

அமைதியாயிரு...
எதையும் பெரிதுபடுத்தாதே...
யாராலும் நீ வாழ்வதை தடுக்கமுடியாது...
உன் வாழ்க்கை ஒரு சுகமான தெய்வீகமான பயணம்...
க்ருஷ்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு, நிதானமாய் அழகாய் எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டு பயணம் செய்….


க்ருஷ்ணனின் இஷ்டப்படி

ராதேக்ருஷ்ணா 

க்ருஷ்ணன் உனக்கென விசேஷமாக திட்டமிடுகிறான்... நீ ஏன் அதை விட்டு மற்றவரைப் போல் உன் வாழ்க்கை அமையப் போராடுகிறாய் ??? உன் வாழ்க்கை உன் க்ருஷ்ணனின் இஷ்டப்படி இருக்கட்டும்... அப்போதுதான் உன் வாழ்க்கையின் மஹிமை உனக்குப்புரியும்....