Guru Vedham

Guru Vedham

Saturday, February 28, 2015

விடுவித்துக்கொள்…


ராதேக்ருஷ்ணா

தற்பெருமையினால் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ளாதே...
பொய்யினால் உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே...
பயத்தினால் உன்னை நீயே பலவீனமாக்கிக் கொள்ளாதே..
க்ருஷ்ண நாமத்தினால் நீ உன்னை உயர்த்திக்கொள்...
க்ருஷ்ணனிடம் உன்னை ஒப்படைத்து, கவலைகள், பாபங்கள், இவற்றிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்…


பக்தி செய்ய...


ராதேக்ருஷ்ணா

பக்தி செய்ய உன் வயது முக்கியமல்ல...
பக்தி செய்ய உன் குலம் முக்கியமல்ல...
பக்தி செய்ய உன் படிப்பு முக்கியமல்ல...
பக்தி செய்ய உன் சொத்து முக்கியமல்ல...
பக்தி செய்ய உன் இருப்பிடம் முக்கியமல்ல...
பக்தி செய்ய நம்பிக்கையே முக்கியம்...
பக்தி செய்ய குரு வழிகாட்டுதலே முக்கியம்...
பக்தி செய்ய உன் மனமே முக்கியம்...
பக்தி செய்ய க்ருஷ்ண க்ருபையே முக்கியம்...
நீ பக்தி செய்து ஆனந்தமாக க்ருஷ்ணனை அனுபவித்து. வாழ்வை வெல்லவே பிறந்திருக்கிறாய்…


விட்டுத்தள்ளு...


ராதேக்ருஷ்ணா


விட்டுத்தள்ளு...
உன்னை ஒதுக்கி வைத்தால் வைக்கட்டுமே...அப்பாடா என்று நிம்மதியாக இரு... க்ருஷ்ணன் எப்படியும் உன்னை ஒதுக்கமாட்டான்... அவனால் உன்னை ஒதுக்கவும் முடியாது...
உன்னை தன்னிடமிருந்து ஒதுக்கிவைத்து மனிதர்கள் நீ க்ருஷ்ணனை அனுபவிக்கும் நேரத்தை அதிகப்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் என்று ஆனந்தக்கூத்தாடு... அதை விட்டு விட்டு புலம்புவாயா?!?


நாமஜபம் செய்…


ராதேக்ருஷ்ணா 

கொஞ்சம் பொறுமையாயிரு...
மனிதர்கள் எல்லோருக்கும் தன்னை உணரவும், சரி செய்துகொள்ளவும் சிறிது கால அவகாசம் தேவை...
உன்னை நீ மாற்றிக்கொள்ளவும் கொஞ்சம் கால அவகாசம் தேவை... அனாவசியமாக உன்னை நீயே நொந்துகொள்ளாதே...
சத்தியமாய் க்ருஷ்ணன் உன்னை மாற்றிக்காட்டுவான்...
நம்பிக்கையோடு நாமஜபம் செய்…


இப்போது வாழ்...


ராதேக்ருஷ்ணா 

உன்னுள்ளே க்ருஷ்ணன் என்னும் அழியாத சொத்து என்றும் மாறாமல் இருக்கிறது. அதனால் நீயும் ஒரு தெய்வப்பிறவியே...
நடந்ததை மற...
நடக்கப்போவதை விடு...
இப்போது வாழ்…


பிரியமாட்டான்...



ராதேக்ருஷ்ணா 

உன் உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது...
உன் பக்தி ஒரு நாளும் தோற்காது...
உன் நாம ஜபம் ஒரு நாளும் உன்னைக் கைவிடாது...
உன் நம்பிக்கை ஒரு நாளும் கெடாது...
உன் க்ருஷ்ணன் ஒரு நாளும் உன்னைப் பிரியமாட்டான்...
உன் வாழ்க்கை ஒரு நாளும் வீழாது

க்ருஷ்ணன் தீர்மானிக்கட்டும்…


ராதேக்ருஷ்ணா 

அகம்பாவிகளிடம் அடங்கிப்போகாதே...
நம்பிக்கை துரோகிகளிடம்
பயப்படாதே...
வெளிவேஷம் போடுபவரிடம் விட்டுக்கொடுக்காதே...
உன் க்ருஷ்ணன் உனக்கு இவர்களை வெல்ல வழி சொல்லித்தருவான்...
தடைகளைத் தகர்த்தெறி...
உன் வழியை க்ருஷ்ணன் தீர்மானிக்கட்டும்…


கைவிட மாட்டான்…


ராதேக்ருஷ்ணா

எதுவரினும் கலங்காதே...
கண்ணன் உனக்கு வழி காட்டுவான்...
உன்னை நீயே குழப்பிக்கொள்ளாதே...
கண்ணன் உன்னை கைவிடவே மாட்டான்…


க்ருஷ்ண பக்தி


ராதேக்ருஷ்ணா 

உனது அநாவசியமான பேச்சைக் குறைத்துக்கொள்...
உனது தேவையற்ற சந்தேகங்களை மாற்றிக்கொள்...
உன்னை மற்றவர்கள் கொண்டாடவேண்டும் என்று ஒரு காரியத்தையும் செய்யாதே...
உன் பொறுப்புகளை உணர்ந்து செயல்படு...
உண்மையான அக்கறையோடு வேலை செய்...
க்ருஷ்ண பக்தியோடு வாழ்...
உலகம் உன்னைக் கொண்டாடும்….


Tuesday, February 24, 2015

பக்குவமான நிலை



ராதேக்ருஷ்ணா

யார் உன்னை எப்படி நடத்தினாலும், நீ எல்லோரையும் மரியாதையாக நடத்து...
யார் உன்னிடம் பொய்யாகப் பழகினாலும், நீ மெய்யாகப் பழகு...
அப்போது உன் மீது உனக்கே ஒரு மரியாதை வரும்...
உன் க்ருஷ்ணன் உன்னைப் பக்குவமான நிலையில் பார்க்கவே ஆசைப்படுகிறான்

பாரமில்லாமல் இரு…


ராதேக்ருஷ்ணா 

வாய்த்ததோ ஒரு வாழ்க்கை...
அதைச் சரியாய் வாழ்ந்துவிட்டு போ...
கிடைத்ததோ அழகான மனிதப்பிறவி...
அதை அற்புதமாய் உபயோகப்படுத்திக்கொள்...
இருப்பதோ ஒரு மனசு...
அதை க்ருஷ்ணனின் கையில் கொடுத்துவிட்டு பாரமில்லாமல் இரு…


மூளையின் பலம்


ராதேக்ருஷ்ணா 

எல்லாம் ஒழுங்காக நடந்தால் உன் மூளை யோசிப்பதை நிறுத்திவிடும்...
திடீர் திடீரென ஏதாவது நடந்தால் தான் நீ வித்தியாசமாக, விசேஷமாக உன் மூளையைக் கசக்கிப் யோசிப்பாய்.... அப்போது உன் மீதே உனக்கு ஒரு நம்பிக்கையும், சந்தோஷமும் வரும்...அதற்காகத்தான் க்ருஷ்ணன் உன் வாழ்க்கையில் பல காரியங்களைச் செய்கிறான்...
உன் மூளையின் பலம் உனக்குப் புரியவில்லை…


நிம்மதியாய் கழிப்பாய்…


ராதேக்ருஷ்ணா 

உன் மனதில் க்ருஷ்ணன் என்னும் கருப்பு அழகு தெய்வத்திற்கு கோயில் கட்டு. அந்தக் கோயிலின் அஸ்திவாரமாக உன் குருவை வைப்பாய்... அது உன்னுடைய சொந்தக் கோயில். அதில் உன் இஷ்டப்படி உன் க்ருஷ்ணனுக்குப் பூஜை செய். உன் இஷ்டப்படி கண்ணனுக்கு நிவேதனம் செய்... உன் நேரத்தை அந்தக் கோயிலில் நிம்மதியாய் கழிப்பாய்…


Wednesday, February 11, 2015

வருந்தாதே...


ராதேக்ருஷ்ணா 

சில சந்தர்ப்பங்களில் உன்னுடைய சம்மதம் இல்லாமலேயே சில பெரிய பொறுப்புகள் உன் தலை மீது விழும்...
அதற்காக வருந்தாதே...
க்ருஷ்ணனே உன் வாழ்க்கையில் ஒரு விசேஷ மாற்றம் உண்டாக்க அந்தப் பொறுப்புகளை உன் மீது சுமத்தியிருக்கிறான்...
அதனால் அவனே அதை நடத்தும் சாமர்த்தியத்தையும், பலத்தையும் தருவான்..



க்ருஷ்ணன் பார்த்துப்பான்...


ராதேக்ருஷ்ணா 

எதையும் யோசிக்காதே...
வெறுமனே நாம ஜபம் செய்...
எல்லாத்தையும் க்ருஷ்ணன் பார்த்துப்பான்...
கவலையில்லாமல் நீ வாழ்…


Sunday, February 8, 2015

ஸ்ரீ கூரத்தாழ்வான் திருநக்ஷத்திரம்…

இன்று ஸ்ரீ கூரத்தாழ்வான் திருநக்ஷத்திரம்… 08.02.2015

அந்தப்புரம்


ராதேக்ருஷ்ணா 

க்ருஷ்ணனின் மனம் உன் அந்தப்புரம்... உன் இஷ்டப்படி நீ சுதந்திரமாக விளையாடு...
உன்னை யாரும் தடுக்கமுடியாது...
உன்னை யாரும் வெளியில் தள்ள முடியாது...
உனக்காகவே உன் க்ருஷ்ணனின் மனம் ஏங்குகிறது...
உனக்காகவே உன் கண்ணன் வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறான்….


எல்லோரும் பக்தர்கள்...

ராதேக்ருஷ்ணா…

எல்லோரும் பக்தர்கள்...
எல்லோரும் பகவானின் குழந்தைகள்...
இந்த உலகில் நாம் எல்லோரும் உத்தமமான மஹாத்மாக்களின் வார்த்தைகளினால் தான் தெய்வத்தை அறிகிறோம்...
அதனால் யாரையும் குறை கூறவோ, கேவலப்படுத்தவோ நம் யாருக்கும் ஒரு நாளும் அதிகாரமில்லை. ஆகவே உன் பக்தியில் நீ உயரும் வழியை மட்டுமே பார்...அதை மட்டுமே உன் க்ருஷ்ணன் உன்னிடம் எதிர்பார்க்கிறான்..


க்ருஷ்ணனின் காலைப் பிடி


ராதேக்ருஷ்ணா 

நீ சோர்ந்துபோய் விட்டால், உன் பூர்வ ஜன்ம கர்ம வினைகள், உன்னை ஓட ஓட விரட்டி, பயமுறுத்தி, உன்னைப் பாடாய்படுத்தும்....
நீ க்ருஷ்ணனின் காலைப் பிடித்துக்கொண்டு தைரியமாய் விடாமல் நாமஜபம் செய்தால், உன்னைக் கண்டு, உன் பூர்வஜன்ம கர்மவினைகள் பயந்து நடுங்கி, ஓட்டமாய் ஓடி தற்கொலை செய்துகொள்ளும்...
நீ அதைப் பார்த்து கை கொட்டி சிரிக்கலாம்…


ஜாக்கிரதை....


ராதேக்ருஷ்ணா

எல்லோரிடமும் பழகு. ஆனால் யார் வேண்டுமானாலும் உனக்கு அறிவுரை சொல்லவோ, உன் நேரத்தைத் தன் இஷ்டப்படி உபயோகப்படுத்தவோ ஒரு நாளும் இடம் கொடுத்துவிடாதே...
பிறகு அவரவர் ஆசைகள், வெறுப்புகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்களை உன் மனதிலும், வாழ்விலும் திணித்துவிடுவர்...
க்ருஷ்ணனைத் தவிர யாரையும் ஒரு எல்லைக்குமேல் உன் மனதிலோ, வாழ்விலோ அனுமதித்துவிடாதே...
ஜாக்கிரதை….


க்ருஷ்ணா என்று கூப்பிடு


ராதேக்ருஷ்ணா….


குழந்தை "அம்மா" என்று எப்போது ஆசையாய் கூப்பிடும் என்று காத்திருக்கும் தாய் போலே, நீ எப்போது "க்ருஷ்ணா" என்று கூப்பிடுவாய் என்று உன் க்ருஷ்ணன் ஆவலோடு காத்திருக்கிறான்...
இப்பொழுது ஒரு தடவை ஆசையாய் க்ருஷ்ணா என்று கூப்பிடு பார்க்கலாம்….


கண்ணன் மாற்றித்தருவான்..


ராதேக்ருஷ்ணா 

உன்னோடு சண்டை போட உலகில் யாருக்கும் இஷ்டமில்லை... அவரவருக்கு வாழ்வில் ஆயிரம் பிரச்சினைகள்...
உனக்கு உன் இயலாமையின் மீது கோபம்...அதை ஏன் அடுத்தவரிடம் காட்டுகிறாய்??
உனக்கு உன் பொறாமையின் மீது கோபம்...அதை ஏன் அடுத்தவர் மீது திணிக்கிறாய்??
உனக்கு பிரச்சினை நீ தான்...
உன்னை மாற்றினாலொழிய உனக்கு நிம்மதியில்லை...
உன்னை மாற்ற உன்னால் முடியவில்லை...
உன்னை கண்ணனிடம் கொடுத்துவிட்டு கொஞ்சம் ஓய்வெடு...
உன்னை அவன் மாற்றித்தருவான்..


க்ருஷ்ணன் தந்திருக்கிறான்...


ராதேக்ருஷ்ணா

ஏதோ நீ மட்டும் தான் யோசித்துப் பேசுவதாக நினைக்காதே...
உலகில் அனைவருக்குமே பகவான் க்ருஷ்ணன் யோசிக்கும் திறனைத் தந்திருக்கிறான்...
நீ யோசிப்பதைப் போலவே அடுத்தவர் யோசிக்க வேண்டிய அவசியமில்லை...
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக யோசிக்க வைப்பதே கண்ணன் தான்...
நீ யோசிக்கும் முறை தான் உயர்ந்தது என்றும் நினைத்துவிடாதே...உன் அனுபவத்தில் அது உயர்ந்ததாய் உனக்குத் தோன்றுகிறது…அவ்வளவே…



யாரிவர்கள்...

ராதேக்ருஷ்ணா…

யாரிவர்கள்...பாவம் மானிடர்கள்...
யாரிவர்கள்...ஆசையில் சிக்குண்டவர்கள்...
யாரிவர்கள்... முன்வினையால் பிறந்தவர்கள்...
யாரிவர்கள்...
தன்னையே மறந்தவர்கள்...
யாரிவர்கள்...
மரணத்திற்காகக் காத்திருப்பவர்கள்...
யாரிவர்கள்...
உன்னைக் காக்க முடியாதவர்கள்...
இவர்களைப் போய் மனதில் வைத்து உன்னை யார் கஷ்டப்படச் சொன்னார் ?!?

உன்னையும்,உலகையும், யாவரையும் அறிந்த கண்ணன் அல்லவா உன்னை ஒழுங்காகக் காப்பான்...
கண்ணனை மட்டும் நினை..
கண்ணன் மட்டுமே நிரந்தரம்..

நிம்மதியாய் இரு...


ராதேக்ருஷ்ணா 

எது நடந்தாலும் நன்மைக்கே..
ஒன்றும் நடக்கவில்லை என்றாலும் நன்மைக்கே...
எது வந்தாலும் நன்மைக்கே..
எதுவும் வரவில்லை என்றாலும் நன்மைக்கே..
எதை இழந்தாலும் நன்மைக்கே..
எதையும் நினைத்து உன் வாழ்க்கையை நீ வெறுக்காதே...
உன் வாழ்க்கை உனக்கு நன்மையே செய்தது...
நன்மையே செய்துகொண்டிருக்கிறது...
நன்மையே செய்யும்...
உன் வாழ்க்கை க்ருஷ்ணன் கையில்...
நிம்மதியாய் இரு…


எத்தனை இரவு!!


ராதேக்ருஷ்ணா ..

எத்தனையோ இரவு காமத்தின் பிடியில்...
எத்தனையோ இரவு துக்கத்தின் மடியில்...
எத்தனையோ இரவு
பயத்தின் நிழலில்...
எத்தனையோ இரவு தூக்கத்தின் களிப்பில்...
எத்தனையோ இரவு கனவுகளின் வாசலில்...
இன்னும் எத்தனையோ இரவு...
போனதோ பல இரவு...
இன்னும் எத்தனை இரவோ நமக்கு இங்கே ???
மீதி இரவை கண்ணன் என்னும் கருந்தெய்வத்தோடு கழிப்போமே….


பீஷ்மரை நினை


ராதேக்ருஷ்ணா

எதை இழந்தாலும் பீஷ்மரை நினைத்துக்கொள்... தானாகவே மனதில் ஒரு தைரியம் வரும்....
எது நடந்தாலும் பீஷ்மரைப் போல் வருவதை க்ருஷ்ண ப்ரசாதமாய் ஏற்றுக்கொள்...
சத்தியமாய் க்ருஷ்ணன் உன்கூட இருந்து உன் வாழ்வை நடத்துவான்…