Guru Vedham

Guru Vedham

Monday, January 26, 2015

விட்டுவிடாதே...


ராதேக்ருஷ்ணா 

நாம ஜபத்தைத் தவிர உனக்கு நல்ல தோழமை கிடையாது...
நாம ஜபத்தைப் போல் உன் மேல் அக்கறை கொண்டவர் யாருமில்லை...
நாம ஜபத்தைப் போல் உன்னைக் காப்பாற்ற யாருமே கிடையாது...
நாம ஜபமே உன் கவலைகளுக்கு ஒரே மருந்து...
நாம ஜபமே உன் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு...
அதனால் நாமஜபத்தை மட்டும் ஒரு நாளும் விட்டுவிடாதே...
ராதேக்ருஷ்ணா


சாம்ராஜ்ஜியம்...


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கை ஒரு சாம்ராஜ்ஜியம்...
அந்த ப்ரேம சாம்ராஜ்ஜியத்தின் பேரரசன் க்ருஷ்ணன்...
அந்த அற்புத சாம்ராஜ்ஜியத்தின் ராணி ராதிகா...
அந்த உத்தம சாம்ராஜ்ஜியத்தின் மஹாமந்திரி உன் குருநாதர்...
அப்பொழுது நீ யார் ???
அந்த அழகான சாம்ராஜ்ஜியத்தின் அத்ருஷ்டக்கார யுவராஜன் / யுவராணி நீ தான்....
அதனால் அன்புகுக்குழந்தையே...
ஆனந்தமாய் விளையாடிக்கொண்டு, உன் கடமைகளை ஆசையாய் செய்துகொண்டு, ஒரு கவலையில்லாமல் சந்தோஷமாய் இரு…


நிம்மதியாய் இரு


ராதேக்ருஷ்ணா 


ஒரு சிறு பறவை தன் விடாமுயற்சியால் அழகான ஒரு கூடு கட்டி நம்பிக்கையோடு ஆனந்தமாய் வாழும்போது, க்ருஷ்ணனை நம்பும் நீ நிம்மதியாய் இந்த உலகில் வாழமுடியாதோ ?!?



க்ருஷ்ணனின் பொறுப்பு...


ராதேக்ருஷ்ணா 

உன்னுடைய பிரச்சினைகள் உனக்கு தெரியும் முன்பே க்ருஷ்ணனுக்குத் தெரியும்...
அதனால் தீர்வை அவன் ஏற்கனவே தயாராகவே வைத்திருக்கிறான்...
நீ பிரச்சனையாகப் பார்ப்பதாலேயே அது பிரச்சனையாகத் தெரிகிறது...
நீ பிரச்சனைகளை நினைத்து நொந்துபோகாதே...
உன்னை ஜெயிக்கவைப்பது க்ருஷ்ணனின் பொறுப்பு…


உன்னால் முடியும்...


ராதேக்ருஷ்ணா 

உன்னால் முடியும்...
க்ருஷ்ண க்ருபையை உணர உன்னால் முடியும்...
எப்போதும் அமைதியாய் வாழ உன்னால் முடியும்..
எந்த சூழ்நிலையிலும் தெளிவாக யோசிக்க உன்னால் முடியும்...
எடுத்த காரியத்தை பதற்றப்படாமல் செய்து முடிக்க உன்னால் முடியும்...
ஞானத்தை உள்ளபடி அறிய உன்னால் முடியும்...
வைராக்கியத்தினால் வேண்டாததை ஒதுக்கித் தள்ள உன்னால் முடியும்...
உன்னை க்ருஷ்ணன் அழகாக, அருமையாக, நேர்த்தியாகத்தான் படைத்திருக்கிறான்…


ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே…


ராதேக்ருஷ்ணா 

நீ என்றுமே க்ருஷ்ணனுக்கு மிகப்பிரியமான ஜீவனே...
நீ எப்போதும் க்ருஷ்ணனின் விசேஷ சொத்து தான்....
நீ எல்லா சமயத்திலும் க்ருஷ்ணனின் செல்லக் குழந்தையே...
அதனால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே…


உனக்கென்ன குறைச்சல் !!!


ராதேக்ருஷ்ணா 

உன்னை உன் க்ருஷ்ணன் தன் கைகளில் ஆசையோடு தாங்குகிறான்...
உன்னை உன் க்ருஷ்ணன் தங்கத் தாம்பாளம் என்னும் வாழ்க்கையில் வைத்து அன்போடு தாங்குகிறான்...
உன்னை உன் க்ருஷ்ணன் தன் இதயக்கோயிலில் பொக்கிஷமாய் வைத்துத் தாங்குகிறான்...
உனக்கென்ன குறைச்சல் !!!
நீ இளவரசி / நீ இளவரசன்…


உன் உரிமை…


ராதேக்ருஷ்ணா 

உனக்கு க்ருஷ்ணனிடம் பூரண உரிமையுண்டு...
க்ருஷ்ணனும் நீ அவனை உரிமையோடு கூப்பிடுவதை விரும்புகிறான்...
க்ருஷ்ணன் நீ அவனிடத்தில் உரிமையோடு கேட்பதை ரசிக்கிறான்...
க்ருஷ்ணனை குனியவைத்து நீ பச்சைக்குதிரை தாண்டினாலும் அவன் அதை ஆசையாய் கொண்டாடுகிறான்...
உன் க்ருஷ்ணன் உன் உரிமை…


Saturday, January 17, 2015

தலை விதி…


ராதேக்ருஷ்ணா 


உன் பக்திக்கு கண்ணன் பொறுப்பு...
உனக்கு ஞானம் தருவது கண்ணனின் கடமை...
உனக்கு வைராக்கியத்தைத் தரவேண்டியது கண்ணனின் வேலை...
உனக்கு தரிசனம் தருவது அவன் தலையெழுத்து...
அவன் நாமத்தைச் சொல்லி, அவனை அனுபவிப்பதே உன் தலை விதி…

மாடு மேய்க்கும் கண்ணா...


ராதேக்ருஷ்ணா 

மாடு மேய்க்கும் கண்ணே...
நீ வரவேண்டும் சொன்னேன்..
மாடு மேய்க்கும் கண்ணா...
நீ அணைக்க வேண்டும் என்னை...
மாடு மேய்க்கும் கண்ணா...
நீ முத்தம் தாடா என் மன்னா...
கண்ணா...
என்னையும் நீ மேய்க்கும் மாடாக நினை...
உனக்கு இட்டமான பசுவாக என்னை ஏற்பாய்...
என்னை இனிது மறித்து உன் ப்ரேமையைத் தருவாய்...
என்னையும் ப்ருந்தாவனம் கொண்டு சென்று, உன் விருப்பப்படி உன்னருகே வைத்து, உன் ஆசை தீர விளையாடு…

பொங்கல் நல்வாழ்த்துக்கள்…


ராதேக்ருஷ்ணா 

மனம் என்னும் பானையில் சாந்தி என்னும் பொங்கல் பொங்கட்டும்...
உடல் என்னும் பானையில் ஆரோக்கியம் என்னும் பொங்கல் பொங்கட்டும்...
வாழ்க்கை என்னும் பானையில் நிம்மதி என்னும் பொங்கல் பொங்கட்டும்...
பூமி என்னும் பானையில் பசுமை என்னும் பொங்கல் பொங்கட்டும்...
குடும்பம் என்னும் பானையில் அன்பு என்னும் பொங்கல் பொங்கட்டும்...
கடமை என்னும் பானையில் சிரத்தை என்னும் பொங்கல் பொங்கட்டும்...
நேரம் என்னும் பானையில் அக்கறை என்னும் பொங்கல் பொங்கட்டும்...
உலகம் என்னும் பானையில் ஒற்றுமை என்னும் பொங்கல் பொங்கட்டும்...
பக்தி என்னும் பானையில் க்ருஷ்ணன் என்னும் பொங்கல் பொங்கட்டும்...
தை என்னும் பானையில் மங்களம் என்னும் பொங்கல் பொங்கட்டும்...
இனிய அருள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்…

செதுக்கி வை…


ராதேக்ருஷ்ணா 

உன் மனம் அலை பாய்ந்தால், அதில் கண்ணனை ஓடம் விட வை...
உன் மனம் ஊஞ்சல் போல ஆடிக்கொண்டிருந்தால், அதில் ராதையையும் கண்ணனையும் உட்கார்ந்து ஆட வை..
உன் மனம் கல் போல் இருந்தால், அதில் விட்டலனையும், ருக்குமாயியையும் நிற்க வை...
உன் மனம் மரம் போலிருந்தால், அதில் புரி ஜகந்நாதனையும், பலராமனையும், சுபத்திராவையும் செதுக்கி வை…

உன்னால் முடியும்…


ராதேக்ருஷ்ணா 

எழுந்து நில்...உன்னால் முடியும்...
துணிந்து நில்...உன்னால் முடியும்...
நிமிர்ந்து நில்...உன்னால் முடியும்...
தனித்து நில்...உன்னால் முடியும்...
சேர்ந்து நில்...உன்னால் முடியும்...
தெம்பாய் நில்...உன்னால் முடியும்...
தெளிவாய் நில்...உன்னால் முடியும்...
தீர்மானமாய் நில்...உன்னால் முடியும்...
வைராக்கியத்தோடு நில்...உன்னால் முடியும்...
விவேகத்தோடு நில்...உன்னால் முடியும்...
ஆனந்தத்தோடு நில்...உன்னால் முடியும்...
பக்தியோடு நில்...உன்னால் முடியும்...
பணிவோடு நில்...உன்னால் முடியும்...
க்ருஷ்ணனோடு நில்...உன்னால் முடியும்…

Sunday, January 11, 2015

க்ருஷ்ணன் ரசிக்கும் ஜீவன்...


ராதேக்ருஷ்ணா ….

நீ ஒன்றும் முட்டாள் இல்லை.
நீ ஒன்றும் உதவாக்கரை இல்லை...
நீ ஒன்றும் பயந்தாங்கொல்லி இல்லை...
நீ ஒன்றும் பாவி இல்லை...
நீ ஒன்றும் யாருக்கும் அடிமை இல்லை...
நீ என்றுமே க்ருஷ்ணனுக்கு மிகப்பிரியமான ஜீவன்...
நீ என்றுமே க்ருஷ்ணன் ரசிக்கும் ஜீவன்...
நீ என்றுமே க்ருஷ்ணனின் பாதுகாப்பில் இருக்கும் ஜீவன்…

பாரதத்தின் குமரன்...

04-10-1904....
11-01-1932....

எங்கள் குமரன் ...
சென்னிமலையின் குமரன்...
திருப்பூர் கண்ட குமரன்...
பாரதத்தின் குமரன்...
தேசபக்தியின் குமரன்...
தேசக் கொடியைக் உயர்த்தி தன் உடலை கீழே விட்ட குமரன்...
கொடி காத்த குமரா...
தேசக்கொடி பறக்கும்போது உன்
ஆனந்தம் அதில் தெரிகிறது...
கொடி உள்ளவரை நீ உண்டு...
வந்தேமாதரம்...
நீ உடலோடு வாழ்ந்தது 28 ஆண்டு...
நீ கொடியோடு வாழ்வது பல்லாண்டு…

நாமஜபம் செய்...


ராதேக்ருஷ்ணா 


உன்னாலும் சிறந்த பக்தர்கள் போல பக்தி செய்யமுடியும்...
விடாமல் நாமஜபம் செய்...
சத்தியமாய் க்ருஷ்ணன் உன்னை மிகச் சிறந்தப் பக்தனான / பக்தையாகவே பார்க்க ஆசைபடுகிறான்...
உன் ஆசையெல்லாம் நடத்தித்தரும் அவனுடைய ஆசையா நடக்காது ?!?
நீ பக்தியின் எல்லையைப் பார்ப்பாய்…

உன்னைத் தா...


ராதேக்ருஷ்ணா 


நீ உன்னைத் தா...
கண்ணன் தன்னைத் தருவான்...
நீ இதுவரை இழந்ததையெல்லாம் மீண்டும் தருவான்...
இனி நீ எதையும் இழக்காமல் திடமாய் காப்பான்...
நீ க்ருஷ்ணனுக்கு உன்னைத் தந்துவிடேன்.


வாடாத மலர்…


ராதேக்ருஷ்ணா 

உன் மனம் அழகான ஒரு மலர்...அதை தேவை இல்லாத எண்ணங்கள் என்னும் முட்களால் கிழித்துப் போடாதே...
உன் மனம் என்னும் மலரை க்ருஷ்ணன் கையில் கொடுத்துப்பார்...
அதை அவன் முகர்ந்து பார்த்து, அனுபவிக்கும் அழகை கொஞ்சம் பார்...
உன் மனம் க்ருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த வாடாத மலர்…

நிதானமாய் இரு


ராதேக்ருஷ்ணா 

குடும்பத்தில் ஒருவர் கோபத்தில் இருக்கும்போது, மற்றவர் நிதானமாய் இருப்பது உத்தமம். குடும்பம் என்பது ஒருவரையொருவர் புரிந்து அனுசரித்து நடப்பதே... கணவனோ மனைவியோ
ஒருவர் கோபப்படும்போது மற்றவர் அமைதி காத்து, நிதானமாய் நடந்தால் சீக்கிரத்தில் நிலைமை மாறும்...
இதைத்தான் கண்ணன் நம்மிடம் எதிர்பார்க்கிறான்...
அவன் நம் குடும்பத்தை தன் குடும்பமாகப் பார்க்கிறான்...
கண்ணன் மனம் நோகாமல் நடப்போம்…

உனக்கு என்ன குறை?


ராதேக்ருஷ்ணா 

க்ருஷ்ணன் மனதில் என்றும் நீ இருக்கிறாய்....
க்ருஷ்ணனின் கருணையில் உனக்கும் பங்கு உண்டு...
க்ருஷ்ணன் உன் பெயரை தினமும் பல முறை உச்சரிக்கிறான்...
க்ருஷ்ணன் இப்படி உன்னை நினைத்து வாழும்போது உனக்கு என்ன குறை....
நீ அவனை இப்படி அனுபவிக்கவேண்டாமா ???


தாழ்வாக நினைக்காதே…


ராதேக்ருஷ்ணா ….

உன்னுள்ளே ஒரு சக்தி உண்டு...
உன்னுள்ளே ஒரு நிதானம் உண்டு...
உன்னுள்ளே ஒரு அமைதி உண்டு...
உன்னுள்ளே ஒரு தைரியம் உண்டு...
உன்னுள்ளே ஒரு தெளிவு உண்டு...
உன்னுள்ளே ஒரு பொறுமை உண்டு...
உன்னுள்ளே ஒரு ஞானம் உண்டு...
உன்னுள்ளே ஒரு உண்மை உண்டு...
உன்னுள்ளே ஒரு நேர்மை உண்டு...
உன்னுள்ளே க்ருஷ்ணன் உண்டு....
அதனால் ஒருபோதும் உன்னைத் தாழ்வாக நினைக்காதே…

க்ருஷ்ணனின் பொறுப்பு....


ராதேக்ருஷ்ணா 

உன் தோள்கள் எப்போதும் பொறுப்புகளைச் சுமக்கத் தயாராகட்டும்...
க்ருஷ்ணன் எப்போது உனக்கு எந்தப் பொறுப்பைத் தருவான் என்பதை நீ ஊகிக்கவே முடியாது...
பொறுப்பையும் தருவான்...
அதைத் தாங்கும் பலமும் தருவான்...
அதை நடத்தும் வழியையும் சொல்லித்தருவான்...
அந்தப் பொறுப்பை நீ செய்து முடிக்க உன் தோளோடு தோளாகவும் நிற்பான்...
நிமிர்ந்து நில்...
நீ ஜெயிப்பது க்ருஷ்ணனின் பொறுப்பு….

நாமம் சத்தியமே ...


ராதேக்ருஷ்ணா 

சில சந்தர்ப்பங்களில் குரு சொல்வது தவறாகத் தோன்றும். பல சந்தர்ப்பங்களில் குரு செய்வது தவறாகத் தெரியும். எது எப்படி இருந்தாலும், குரு சொல்லிய நாம ஜபத்தை மட்டும் நிறுத்திவிடாதே... குரு சரியில்லை என்று உனக்குத் தோன்றினாலும் அவர் சொல்லிக்கொடுத்த நாமஜபம் சத்தியமே...அது உன்னை நிச்சயம் காக்கும்..


Saturday, January 3, 2015

க்ருஷ்ணன் உன் பலம்...


ராதேக்ருஷ்ணா 

க்ருஷ்ணன் உன் எஜமான்...
உனக்கு என்ன தேவை !!!
க்ருஷ்ணன் உன் நலம் விரும்பி...
உனக்கு என்ன குறை !!!
க்ருஷ்ணன் உன் சொத்து...
உனக்கு என்ன கவலை !!!
க்ருஷ்ணன் உன் காவலன்...
உனக்கு என்ன பயம் !!!
க்ருஷ்ணன் உன் நாயகன்...
உனக்கு என்ன கஷ்டம் !!!
க்ருஷ்ணன் உன் குரு...
உனக்கு என்ன பிரச்சினை !!!
க்ருஷ்ணன் உன் தோழன்...
உனக்கு என்ன அதிருப்தி !!!
க்ருஷ்ணன் உன் தெய்வம் ...
உனக்கு என்ன யோசனை !!!
க்ருஷ்ணன் உன் பலம்...
உனக்கு என்ன முடியாதது…

Thursday, January 1, 2015

உன்னிஷ்டம் என்னிஷ்டம் ….


ராதேக்ருஷ்ணா ….

க்ருஷ்ணா....
இனி என் வாழ்க்கை உன் பொறுப்பு....
க்ருஷ்ணா....
இனி என் உடல் உன் கோயில்...
க்ருஷ்ணா....
இனி என் மனம் உன் சொத்து...
க்ருஷ்ணா...
இனி என் குடும்பம் உன் கையில்....
க்ருஷ்ணா....
இனி என் எதிர்காலம் உன் ஆசைப்படி....
க்ருஷ்ணா....
இனி என் நேரங்கள் உன் எண்ணப்படி...
க்ருஷ்ணா....
இனி என் பக்தி உன் திருப்திக்காக....
க்ருஷ்ணா...
இனி என் அனுபவங்கள் உன் இச்சைப்படி....
க்ருஷ்ணா....
இனி உன்னிஷ்டம் மட்டுமே என்னிஷ்டம் ….


2015ல்....

ராதேக்ருஷ்ணா …

2015ல்....

1. ஆதிசங்கரர் போல வைராக்கியம் பெறு... 
2. ஸ்வாமி இராமானுஜர் போல சரணாகதி செய்...
3. மத்வாசார்யர் போல பக்தி பெறுவாய்...
4. க்ருஷ்ண சைதன்யர் போல நாமஜபம் ஜபிப்பாய்...
5. மஹாப்ரபு வல்லபாச்சாரியார் போல க்ருஷ்ணனைக் கொஞ்சுவாய்...
6. சந்த் துகாராம் போல குழந்தை மனதை அடைவாய்...
7. மீராமாதா போல நிதானமாய் இரு...
8. ஜெயதேவர் போல ப்ரேமையில் மூழ்கு....
9. பூந்தானம் போல பாகவதம் வாசி...
10. அன்னமாச்சாரியார் போல அன்புடன் பழகு...
11. ஸ்வாமி விவேகானந்தர் போல விவேகம் கொள்...
12. கோவிந்த தாசர் போல பகவானோடு விளையாடு...
13. சக்குபாய் போல விட்டலனைக் கட்டிப்போடு...
14. ஹசீனா ஹமீதா போல யமுனையாற்றங்கரையில் காதல் செய்...
15. துருவதாசன் போல ப்ருந்தாவனத்திற்கு ஓடிவிடு...
16. வடுகநம்பி போல குரு இட்ட வழக்காய் இரு...
17. கல்யாண பிரம்மச்சாரி போல க்ருஷ்ண விக்கிரஹத்தை பூரணமாய் நம்பு...
18. ரமண மஹரிஷியைப் போல "இனி உன்னிஷ்டம் என்னிஷ்டம்" என்று தெய்வத்திடம் கூறிவிடு...
19. புரந்தரதாசர் போல பகவானையே பாடிக்கொண்டிரு....
20. பீவி நாச்சியாரைப் போல சம்பத்குமாரனை மணந்துவிடு...
..................
தினமும் 15 முறை ராதேக்ருஷ்ணா என்று எழுது......


மீட்காமல் விடமாட்டான்….


ராதேக்ருஷ்ணா 

உன்னை நீ தான் எல்லா விஷயங்களிலும் மாட்டி விடுகிறாய்...யாரும் உன்னை எந்த விஷயத்திலும் மாட்டிவிடவில்லை...
ஆனாலும் உன்னை க்ருஷ்ணன் ஒவ்வொரு விஷயத்திலிருந்தும் மீண்டும் மீண்டும் மீட்டுக்கொண்டே இருக்கிறான்...எக்காரணம் கொண்டும் உன்னை கைவிடவும் மாட்டான்... உன்னை மீட்காமல் விடமாட்டான்….

நிம்மதியாய் வாழ்...


ராதேக்ருஷ்ணா 

நிம்மதியாய் தூங்கு....
நிம்மதியாய் எழுந்திரு...
நிம்மதியாய் சாப்பிடு...
நிம்மதியாய் வேலை செய்...
நிம்மதியாய் குடும்பத்தை கவனி....
நிம்மதியாய் பக்தி செய்...
நிம்மதியாய் நாமஜபம் செய்...
க்ருஷ்ணன் உன்னை தினமும் ஆசையாய் கவனித்துக்கொள்கிறான்...
அதனால் நிம்மதியாய் வாழ்...
எந்தக் கவலைக்கும் பிரச்சனைக்கும் க்ருஷ்ணனை எதிர்க்கும் துணிவில்லை…