Guru Vedham

Guru Vedham

Friday, November 28, 2014

உயர்வாக வாழ்வாய்…


ராதேக்ருஷ்ணா ….

பறவைகளைப் பார்த்து மிருகங்கள் பொறாமைப்படுவதில்லை....
மீன்களைப் பார்த்து மரங்கள் பொறாமைப்படவில்லை...
க்ருஷ்ணன் கொடுத்த வாழ்க்கையை அந்தந்த ஜீவன்கள் முழுமையாக வாழ்கின்றன...நீயும் உனக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையை பூரணமாக வாழ்வாய்.... க்ருஷ்ணா என்று ஜபித்துக்கொண்டே உயர்வாக வாழ்வாய்…

சத்தியமாய் காப்பான்..


ராதேக்ருஷ்ணா ….

தன்னை நம்பாத நாஸ்தீகருக்கும் அருளும் கண்ணன், அவனையே நம்பும் உன்னை கைவிட்டுவிடுவானா என்ன??? சத்தியமாய் காப்பான்...காத்திரு…

தெய்வாம்சம் நிறைந்த ஜீவன்....



ராதேக்ருஷ்ணா .

உன்னுள்ளே க்ருஷ்ணன் பூரணமாய் இருக்கிறான்....
அதனால் நீ தெய்வாம்சம் நிறைந்த ஒரு ஜீவன்....
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே.

நல்லதைப் பரப்பு...


ராதேக்ருஷ்ணா 

உனக்கு வேண்டப்பட்ட யாருக்காவது கஷ்டம் வியாதி பிரச்சினை என்றால் உடனே அதை பலரிடம் சொல்லி புலம்பாதே...அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை...அவர்களுக்காக சிறிது நேரம் நாமஜபம் செய்து, க்ருஷ்ணனிடம் பிரார்த்தனை செய்....உலகில் நல்லதைப் பரப்பு…

வேறு என்ன வேண்டும்…

ராதேக்ருஷ்ணா ….

மனம் கல்லாக ஆனால் அதன் மேல் விட்டலனை நிற்க வை..
அவன் உன் மனதில் நின்றுவிட்டால் போதுமே... வேறு என்ன வேண்டும்…



நன்றி சொல்...



ராதேக்ருஷ்ணா 

இழந்ததை நினைத்து நிம்மதியை இழக்காதே ...
உன்னிடம் உள்ளவைகளுக்கு
க்ருஷ்ணனுக்கு நன்றி சொல்...
உன்னோடு க்ருஷ்ணன் இருப்பதற்காக ஆனந்தப்படு

குஷியாக இரு….


ராதேக்ருஷ்ணா 

நீ உன் க்ருஷ்ணனுக்கு என்றுமே குழந்தைதான்...
உலகம் உன்னை பலவிதமாய் பார்க்கிறது...
ஆனால் க்ருஷ்ணன் உன்னைத் தன் குழந்தையாக மட்டுமே பார்க்கிறான்...
ஆகவே குஷியாக இரு….

க்ருஷ்ண பிரசாதம்...


ராதேக்ருஷ்ணா 

உன் உடல் க்ருஷ்ண பிரசாதம். பொறுப்பாய் பார்த்துக்கொள்...
உன் மனம் க்ருஷ்ணனின் சொத்து...ஜாக்கிரதையாய் வைத்துக்கொள்...
உன் வாழ்க்கை க்ருஷ்ணன் தந்த வரம்... அருமையாய் உபயோகித்துக்கொள்…

Wednesday, November 19, 2014

ஆனந்தமாயிரு…


ராதேக்ருஷ்ணா 

நீ அழும்போது உன் க்ருஷ்ணனும் உன்னோடு அழுகிறான்...
அதனால் தயவு செய்து, எதற்கெடுத்தாலும் அழாதே...
நீ சிரிக்கும்போது உன் க்ருஷ்ணனும் உன்னோடு சிரிக்கிறான்...
அதனால் எப்போதும் சிரித்துக்கொண்டே ஆனந்தமாயிரு…

அது போதும்


ராதேக்ருஷ்ணா 

உன்னை யாருக்கும் தெரியவேண்டாம்...
உன்னை யாருக்கும் புரியவேண்டாம்...
உன்னை க்ருஷ்ணனுக்குத் தெரியும்....
உன்னை க்ருஷ்ணன் புரிந்துகொண்டிருக்கிறான்...
அது போதும் இங்கே நீ வாழ... அது மட்டுமே போதும் நீ வாழும் வரை….

என்றும் பெரியவன்….


ராதேக்ருஷ்ணா 

எதையும் பெரியதாய் எடுத்துக்கொள்ளாதே...
இன்று பெரியதான விஷயம், நாளை இதே உலகில் அதற்கு மரியாதையே கிடையாது.
க்ருஷ்ணன் மட்டும்தான் உலகில் என்றும் பெரியவன்….

ஆசைப்படு...


ராதேக்ருஷ்ணா 

ஆசைப்படு...
க்ருஷ்ணனைப் பார்க்க ஆசைப்படு...
க்ருஷ்ணனோடு பேச ஆசைப்படு...
க்ருஷ்ணனிடம் சண்டைபோட ஆசைப்படு...
க்ருஷ்ணனுக்கு முத்தம் தர ஆசைப்படு...
க்ருஷ்ணனை கட்டிப்பிடிக்க ஆசைப்படு...
க்ருஷ்ணன் உன் வீட்டில் உன்னோடு வாழ ஆசைப்படு...
க்ருஷ்ணனோடு தூங்க ஆசைப்படு...
க்ருஷ்ணனை பலவிதமாய் அனுபவிக்க ஆசைப்படு...
க்ருஷ்ணன் மடியில் உயிரை விட ஆசைப்படு…

பலகோடி வழியுண்டு…


ராதேக்ருஷ்ணா 

புலம்புவதை நிறுத்து.
சுயபச்சாதாபத்தை விடு...
இவையிரண்டும் செய்தாலே, உடலும் மனமும் தானாய் பலம் பெறும்...
க்ருஷ்ணனிடம் சரணாகதி செய்...
விடாமுயற்சி செய்...
இந்த இரண்டையும் செய்தால், நிச்சயம் உலகம் வசப்படும்....
நிம்மதியாக வாழ இங்கே பலகோடி வழியுண்டு…

உண்மையாய் இரு...


ராதேக்ருஷ்ணா 

உன் மனதில் தோன்றுவதை எல்லாம் அப்படியே எல்லோரிடமும் பேசிவிடாதே. க்ருஷ்ணனிடம் மட்டுமே உன்னால் எல்லாவற்றையும் மனதில் உள்ளபடி பேசமுடியும்...
மனிதரிடம் நிதானமாய் இரு..
க்ருஷ்ணனிடம் உண்மையாய் இரு…

க்ருஷ்ணனிடத்தில் வை…


ராதேக்ருஷ்ணா 

மனதை தைரியமாக வை...
உடலை ஆரோக்கியமாய் வை...
புத்தியை தெளிவாய் வை...
வார்த்தையை நிதானத்தில் வை...
வாழ்வை க்ருஷ்ணனிடத்தில் வை…

Thursday, November 6, 2014

க்ருஷ்ணனை நம்பு


ராதேக்ருஷ்ணா 

ஒரு பிரச்சினையை பகவானிடம் சொன்ன பிறகு திரும்ப யோசிக்கவே கூடாது. க்ருஷ்ணனுக்கு உன்னை நன்றாகத் தெரியும்.
எப்படி தாய் வரிக்குதிரைக்கு தன் குட்டியின் உடலில் உள்ள கோடுகளைக் கொண்டு அதை அடையாளம் தெரியுமோ, அதுபோல க்ருஷ்ணனுக்கும் நம் மனம்,உடல், பலம், பலவீனம், தேவை, எல்லாம் நன்றாகவே தெரியும். உன் வாழ்க்கையை க்ருஷ்ணனை நம்பி தைரியமாக ஒப்படை.அதன் பிறகு நீ உன் வாழ்வைப் பற்றி யோசிக்கவே அவசியமில்லை. க்ருஷ்ணன் உன்னை எப்படிக் காக்கிறான் என்பதை மட்டும் பார்….

ஜெயித்து வருவாய்…



ராதேக்ருஷ்ணா 

வாழ்க்கையில் பிரச்சினை கஷ்டம் எல்லாம் ஏன் வருகிறது தெரியுமா ?
உனக்குத் தன்னம்பிக்கை அதிகமாவதற்காகத் தான். நல்லா கவனித்துப் பார். ஒவ்வொரு பிரச்சனையிலும், ஒவ்வொரு கஷ்டத்திலும் உனக்கு இன்னும் பலம் கூடியிருக்கிறது. உன் மனதுக்கு விசேஷமான சக்தி கிடைத்திருக்கிறது. பகவான் க்ருஷ்ணன் உன்னை வளர்த்துக்கொண்டு வருகிறான். கஷ்டமும் பிரச்சனையும் உனக்கு விசேஷமான பலம் கொடுக்கும் மருந்துகள். அதனால் நன்றாக அவைகளை ஏற்றுக்கொள். க்ருஷ்ணன் உன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இருக்கும்வரை நிச்சயமாக நீ எல்லாவற்றையும் ஜெயித்து வருவாய்

குதூகலமாய் இரு….


ராதேக்ருஷ்ணா 

க்ருஷ்ணன் பூமியாக இருந்து உன்னைத் தாங்குகிறான்....
க்ருஷ்ணன் சூரியனாக இருந்து உனக்கு வெளிச்சம் தருகிறான்....
க்ருஷ்ணன் காற்றாக உனக்குள் நுழைகிறான்...
க்ருஷ்ணன் ஆகாரமாக இருந்து உனக்கு பலம் தருகிறான்...
க்ருஷ்ணன் வஸ்திரமாக இருந்து உன் மானத்தைக் காக்கிறான்...
இப்படி பலவிதத்தில் க்ருஷ்ணன் உன்னோடு இரண்டறக் கலந்திருக்கிறான்...
ஆண்டாள் சொன்னது போல "உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது"...
என்று க்ருஷ்ணனோடு நம் பந்தம் நிரந்தரம்...
அதனால் கவலையோ, பயமோ, குழப்பமோ, வெறுப்போ, ஏமாற்றமோ வேண்டாம்...
க்ருஷ்ணன் உன்னை விட்டு ஒதுங்குவதுமில்லை. உன்னை ஒதுக்குவதுமில்லை...அதனால் குழந்தை போல குதூகலமாய் சந்தோஷமாய் இரு….

எல்லாம் நன்மைக்காகவே


ராதேக்ருஷ்ணா 

ஏதோ ஒரு அசம்பாவிதமோ, விபத்தோ, நடந்துவிட்டால் உடனே கண் திருஷ்டியோ, பாபமோ, சனி தசையோ, போறாத காலம் என்றோ யோசிக்கக்கூடாது. அப்படி யோசிப்பதை விட்டுவிடு. ஏதோ ஒரு நன்மைக்காகவே எல்லாம் நடக்கிறது என்பதை தீர்மானமாய் நம்பு. க்ருஷ்ணன் உன்னோடு இருக்க உனக்கு எப்படி கெடுதல் சம்பவிக்கும்???

பக்தி செய்...

ராதேக்ருஷ்ணா ...
பகவான் எந்த இடத்தில் உன்னை எப்படி வைத்திருக்கிறாரோ, அந்த நிலைமையில் இருந்துகொண்டு திடமாக, தைரியமாக, நிதானமாக பக்தி பண்ணிக்கொண்டிரு...எப்படி ஒரு தாய்பூனை தன் குட்டியை எந்த இடத்தில் வைத்தால் நல்லது என்று தீர்மானித்து வைக்கிறதோ, அதுபோல பகவானும் உன்னை நல்ல இடத்தில்தான் வைக்கிறார்...நீ பாட்டுக்கு உன் கடமையை செய்.நாமஜபம் செய்...பகவான் உன்னை விட்டுக்கொடுக்கவும் மாட்டார்...கெட்டுப்போகவும் விடமாட்டார்...எத்தனையோ கடந்து வந்தாய்...பக்தி செய்...உன் வாழ்க்கை க்ருஷ்ணனுடைய சொத்தாக நன்றாகவே இருக்கும்...கவலையேபடாதே….