Guru Vedham

Guru Vedham

Thursday, October 30, 2014

க்ருஷ்ண தரிசனம் கிடைக்கும்…


ராதேக்ருஷ்ணா ….

மனம் ஒரு விசித்திரமான பொருள்...
யாருடைய மனமும் உள்ளபடி பவித்திரமாக இல்லை...ஆனால் அந்த மனதிற்குள் பகவானும் இருக்கிறான்...
உன் மனதை சுத்தப்படுத்தும் வேலையை பகவான் க்ருஷ்ணனிடம் ஒப்படைத்துவிட்டு, நீ விடாமல் நாமஜபம் செய்துகொண்டிரு...பகவான் உன் மனதைச் சுத்தப்படுத்தி, அதற்குள்ளேயே இருந்துகொண்டு உனக்கு வேண்டிய அனுக்ரஹம் எல்லாம் செய்வார்....
மனது பகவானின் சொத்து...அவரிடம் கொடுத்துவிடு...சத்தியமாய் சீக்கிரத்திலேயே உன் மனதிற்குள் பகவான் க்ருஷ்ணனின் தரிசனம் கிடைக்கும்…

வாழ்வில் முன்னேறு…


ராதேக்ருஷ்ணா 

முயற்சி செய். ஆனால் ஆசைப்பட்டதெல்லாம் உடனே நடக்குமென்று கனவு காணாதே. எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆலோசனை செய். ஒரு விஷயத்தின் நல்லது கெட்டதை நன்றாகக் கவனி. தெளிவாக முடிவு செய். ஆசையில் தீர்மானிக்காதே...
யதார்த்தமாய் யோசித்துப் பார். க்ருஷ்ணனின் ஆசியோடும், வழிகாட்டுதலோடும், உன் முயற்சியினாலும் வாழ்வில் முன்னேறு…

அன்பைப் பரிமாறு …

ராதேக்ருஷ்ணா …

யாரிடம் குற்றமில்லை?
நீ தவறே செய்ததில்லையோ?
எப்பொழுதும் அடுத்தவர் குற்றத்தையே பேசிப் பேசி, நீ பாபத்தைக் கூட்டிக்கொள்ளாதே... எல்லோரிடமும் ஏதோ ஒரு நல்லது உண்டு... அதை மட்டும் பார்த்து சந்தோஷமாக வாழும் வழியைப் பார்.
ஒரு வேளை நீ குறை சொல்லும் ஒருவர் நாளை இறந்துவிட்டால் ....???

க்ருஷ்ணன் உன் குற்றத்தைப் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லையே...
அன்பைப் பரிமாறு …

கருணைக் கடல்...


ராதேக்ருஷ்ணா 

பகவான் கருணைக் கடல்...
உன்னைக் கஷ்டப்படுத்திப் பார்க்கும் கொடூரமான மனம் அவருக்கில்லை...உன் முன்வினையால் நீ கஷ்டப்படுகிறாய்...ஆனால் பகவான் க்ருஷ்ணன் உன்னைப் பக்குவப்படுத்தி, உன் கஷ்டங்களிலிருந்து உன்னைக் காக்கிறான் .... அதனால் உன் கஷ்டங்களுக்கு பகவானை குறை சொல்லாதே...
உன்னைப் பக்குவப்படுத்தி காப்பதற்காக பகவான் க்ருஷ்ணனுக்கு நன்றி சொல்…

Sunday, October 26, 2014

க்ருஷ்ணனின் அந்தப்புரம் ...


ராதேக்ருஷ்ணா 

மனதில் சமாதானம் இல்லையென்று சொல்வதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை...
விடாமல் க்ருஷ்ணா என்று ஜபித்தால் மனம் தானாக பலம் பெறும்...உன் மனதின் பலவீனங்களை க்ருஷ்ணன் சக்தியாக மாற்றித்தருவான்...
மனம் உன் க்ருஷ்ணனின் அந்தப்புரம் ...
கண்ணன் உன் மனதை வெண்ணெய் எனத் திருடட்டும்….


முன்னே செல்...


ராதேக்ருஷ்ணா ...
கஷ்டமான கால கட்டங்களில் , நம்பிக்கை நூல் போல மெல்லியதாக இருக்கும். ஆனால் அதை தைரியமாக பிடித்துக்கொண்டு முன்னே செல்...சீக்கிரத்தில் அந்த நூல் சணல் போல் தடிமனாக பலமாக மாறும்...அப்படியே அதைப் பிடித்துக்கொண்டு செல். அதுவே தாம்புக்கயிறு போல இன்னும் உறுதியாக மாறும்...அப்படியே முன்னேறி செல்...நிச்சயம் நீ கஷ்டங்களைக் கடந்து தீர்மானமாய் வெல்வாய்... நம்பிக்கை என்னும் நூல் க்ருஷ்ணனின் பலத்தால் நிச்சயமாக பலமாகும்..

கோவர்த்தன பூஜை...

ராதேக்ருஷ்ணா…..

நீ விடாமல் நாம ஜபம் செய்...
எத்தனை காலங்கள் ஆனாலும் தைரியமாய் நாம ஜபம் செய்...

கோவர்தன கிரி ராஜன் போல் பக்தியோடு காத்திரு...
நிச்சயம் உன்னைத் தேடி பகவான் வருவான்...
உன் கஷ்டங்கள் மாறும்...
உன் வாழ்க்கை மாறும்...
உன் கிரிதாரி உன்னைக் காப்பான்...

நாளை கோவர்த்தன பூஜை...
உனக்குப் பிடித்ததை பகவான் க்ருஷ்ணனுக்கு நிவேதனம் செய்...
குடும்பத்தோடு பஜனை செய்...

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் உன்னையும், உன் குடும்பத்தையும் சத்தியமாய் நன்றாக வைப்பான்...
ஜெய் போலோ கோவர்தன கிரிதாரி கோபால் கி ஜெய்….

ஜெய் சீதாராம் ....

ராதேக்ருஷ்ணா …

ஜெய் சீதாராம் ....
பகவான் ராமன் ராவண வதம் முடித்து, சீதா மாதாவுடனும், தன் ப்ரிய லக்ஷ்மணனோடும், மற்றும் தன் தோழர்களோடும், விமானத்தில் இதோ வருகிறார் .....

ஹே தாய்மார்களே ....
வீட்டு வாசலில் அழகாக விளக்கேற்றி வையுங்கள்...

வாருங்கள் குழந்தைகளே...
விதவிதமான பட்டாசுகள் வெடியுங்கள்....

பெரியோர்களே...உரக்க "ஜெய் சீதாராம் ...ஶஶ்ரீ ராம ஜெயம் என்று ஜபியுங்கள்...
வாருங்கள் ...நம் பகவான் ராமனை வரவேற்போம்...
அயோத்திக்கு பகவான் ராமன் 14 வருஷங்கள் கழித்துத் திரும்பி வரும் நாளே தீபாவளி....

அடுத்த தீபாவளிக்குள் நாம் நமது பகவான் ராமச்சந்திரனுக்கு அயோத்தியில் தங்க மாளிகை கட்ட, இந்த தீபாவளியில் நாம ஜபத்தோடு ப்ரார்த்தனை செய்வோம்…




Monday, October 20, 2014

.நீ வெல்வாய்....

ராதேக்ருஷ்ணா ...

விட்டுக்கொடுப்பது தவறல்ல...
ஆனால் அடுத்தவரின் நிம்மதியைப் பற்றிக் கவலைப்படாத சுயநலத்திற்கு விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமேயில்லை... சுயநலவாதிகளின் ஆசைக்கு ஒரு நாளும் அடிபணியாதே...
உன் க்ருஷ்ணன் உன்னோடு நிற்கிறான்...உனக்கு ஆன்ம பலமும், தேக பலமும், மனோ பலமும், திட புத்தி பலமும், வாக்கு பலமும், தைரியத்தோடு யோசிக்கும் பலமும், வெற்றி அடையும் வழியும் பூரணமாய் தருகிறான்...நீ வெல்வாய்....

நலம் விரும்பி...

ராதேக்ருஷ்ணா ...

நீ அவனை நம்புகிறாயோ இல்லையோ, அவன் உன்னை நம்புகிறான்...
நீ அவனை வெறுத்தாலும், அவன் உன்னை நேசிக்கிறான்...
நீ அவனை மறந்தாலும், அவன் உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கிறான்...
நீ அவனை ஒதுக்கினாலும், அவன் உன்னோடு வாழ்கிறான்...
நீ அவனை கவனிக்கவே இல்லையென்றாலும், அவன் உன்னை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்கிறான்...
அவனே உன் க்ருஷ்ணன்...உன் நலம் விரும்பி...

க்ருஷ்ணன் ஆசீர்வதிக்கட்டும்....

ராதேக்ருஷ்ணா ...
எதற்கெடுத்தாலும் உன்னை நொந்துகொள்ளாதே...நீ ஒன்றும் உலகின் கலங்கரைவிளக்கம் அல்ல...அவரவர் கர்மவினைக்குத் தகுந்தபடி வாழ்கிறார்கள்...நீ வெறுமனே வேடிக்கை பார்...நீ யாரையும் திருத்தவேண்டாம்...நீ க்ருஷ்ணனுக்காக வந்தாய்...அவனுக்காக வாழ்வாய்...உன் மனது பயமின்றி நிம்மதியாய் இருக்க க்ருஷ்ணன் ஆசீர்வதிக்கட்டும்....

Thursday, October 16, 2014

தருவாய் ... பெறுவாய் ...


ராதேக்ருஷ்ணா ..

தருவாய் ... பெறுவாய் ...
க்ருஷ்ணனிடம்
கவலையைத் தருவாய்... ஆனந்தம் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
காமத்தைத் தருவாய்...
ப்ரேமையைப் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
வியாதிகளைத் தருவாய்...
ஆரோக்கியம் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
அவசரத்தைத் தருவாய்...
நிதானத்தைப் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
அஹம்பாவத்தைத் தருவாய்..
நிம்மதியைப் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
பயத்தைத் தருவாய்...
தைரியத்தைப் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
குழப்பத்தைத் தருவாய்...
பக்தியைப் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
மனதைத் தருவாய்...
த்யானத்தைப் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
நேரத்தைத் தருவாய்...
நாமஜபத்தைப் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
உன்னைத் தருவாய்...
அவனையே பெறுவாய்….

கவலை தேவையில்லை...


ராதேக்ருஷ்ணா 

கண்ணன் சரணிருக்க என்றுமே கவலை தேவையில்லை...
கண்ணன் அபயக்கரம் இருக்க
வாழ்வில் பயம் தேவையில்லை...
கண்ணன் என்னும் மன்னனிருக்க மனதில் குழப்பம் தேவையில்லை....
கண்ணனின் கடைக்கண் பார்வையிருக்க எதிர்கால சிந்தனை தேவையில்லை…

எல்லாம் இனிமையே...

ராதேக்ருஷ்ணா…

உலகில் எல்லாம் இனிமையே...

துன்பமும் இனிமையே...நம்மைப் பக்குவப்படுத்துவதால்....
பிரச்சினைகளும் இனிமையே... நம்மை யோசிக்கவைப்பதினால்...
வியாதிகளும் இனிமையே...
நமக்கு ஆரோக்கியத்தின் மகிமையை உணர்த்துவதால்...

அவமரியாதைகளும் இனிமையே....நமக்கு வைராக்கியத்தைத் தருவதால்....
தோல்விகளும் இனிமையே... நமக்கு வெற்றியின் ரஹஸ்யங்களைச் சொல்வதால்...
குழப்பங்களும் இனிமையே...நம்மை க்ருஷ்ணனிடம் அழைத்துச்செல்வதால்....
துரோகமும் இனிமையே....நமக்கு யதார்த்தத்தை புரியவைப்பதால்...
மரணமும் இனிமையே...நமக்கு நிலையில்லாமையை காட்டுவதால்...
பயமும் இனிமையே....நமக்குத் தைரியத்தை ஊட்டுவதால்…

தொலைத்துப் பார் ...


ராதேக்ருஷ்ணா 

தினமும் தூக்கத்தில் உன்னைத் தொலைக்கிறாய்...
காமத்தில் உன்னை தொலைத்திருக்கிறாய்...
கவலையில், பிரச்சனையில் உன்னை தொலைத்துக்கொண்டே இருக்கிறாய்....
இன்றிலிருந்து உன்னைக் கொஞ்சம் க்ருஷ்ணனிடம் தொலைத்துப் பார் ...
சுகமாயிருக்கும்…..

க்ருஷ்ண பலம்


ராதேக்ருஷ்ணா 

உன் பலம் உனக்குள்ளே என்றும் குறையாமல் இருக்கிறது...உன் பலம் உன்னுள் இருக்கும் அந்தர்யாமியான க்ருஷ்ணனே...
எந்த காரணம் கொண்டும், இந்த பலம் குறையவே குறையாது...
அதனால் எல்லாவற்றையும் சமாளிக்க உன்னால் முடியும்...
உன்னைச்சுற்றி எது நடந்தாலும் உன்னுள் இருக்கும் க்ருஷ்ண பலம் உன்னைக் காக்கும்...
ப்ரஹ்லாதனையும், துருவனையும், மீராவையும் காத்தது அந்த க்ருஷ்ண பலமே...அதே க்ருஷ்ண பலம்தான் உன்னுள்ளும் இருக்கிறது….

பாரத்தைக் கொடுத்துவிடு….

ராதேக்ருஷ்ணா 

என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்...
எது வேண்டுமானாலும் நடக்காமல் போகட்டும்...
நீ பகவான் க்ருஷ்ணனின் திருவடிகளை இறுக்கிப் பிடித்துக்கொள்....
அவனிடம் பாரத்தைக் கொடுத்துவிடு….


நம்பிக்கையோடிரு...


ராதேக்ருஷ்ணா ...
ஒவ்வொரு நிகழ்வும் ஒரு காரணத்தோடு தான் நிகழ்கிறது...கொஞ்சம் பொறுமையாக இரு.... உனக்குப் புரியும்... புரியவில்லை என்றாலும் நம்பிக்கையோடிரு...
ஒரு நாளும் க்ருஷ்ணன் உனக்குக் கெடுதல் பண்ணவேமாட்டான்.... நிச்சயமாக உன் வாழ்வில் நல்லது நடந்தே தீரும்…

க்ருஷ்ணனுக்காக வாழ்...


ராதேக்ருஷ்ணா 

எதுவும் நிலையில்லை...
அதனால் உன் துன்பமும் நிலையில்லை...மாறும் !!!
எதுவும் நிரந்தரமில்லை...
அதனால் உன் பிரச்சனைகளும் நிலையானதில்லை...தீரும்!!!
எதுவும் நித்தியமில்லை...
அதனால் உன் தோல்விகளும் நித்தியமில்லை...நீ வெல்வாய்...
எதுவும் சாஸ்வதமில்லை...
அதனால் உன் வியாதிகளும் அழியும்...
க்ருஷ்ணனே நித்தியம்...
நிரந்தரம்...சத்தியம்...
க்ருஷ்ணன் உன்னோடு என்றுமிருக்கிறான்...
எல்லா சமயத்திலும் இருக்கிறான்...
அதனால் க்ருஷ்ணனுக்காக வாழ்...
யார் வந்தாலென்ன...
யார் வெறுத்தாலென்ன…

Wednesday, October 8, 2014

வாசுதேவ குடும்பம்...

ராதேக்ருஷ்ணா ...

உன் வீட்டில் க்ருஷ்ணன் இருக்கிறான்...
உன் குடும்பத்தில் ஒருவனாக க்ருஷ்ணன் வாழ்கிறான்...
உன் வீட்டில் நீ சாப்பிடும் ஆகாரத்தை க்ருஷ்ணனும் சாப்பிடுகிறான்...
ஒவ்வொரு இரவும் உன்னோடு தூங்கி, உன்னோடு எழுந்திருக்கிறான்...
உன்னுடைய சுக துக்கங்களில், லாப நஷ்டங்களில், மான அவமானங்களில், க்ருஷ்ணன் உன்னோடு தோள் கொடுத்து நிற்கிறான்...
உன்னை விட்டு ஒரு நாளும் அவன் விலகிப் போகவேமாட்டான்...
உன் குடும்பம் வாசுதேவ குடும்பம்...
 

Tuesday, October 7, 2014

ராச பூர்ணிமா...


ராதேக்ருஷ்ணா ….

இன்று இப்போது ப்ருந்தாவனத்தில் ராச பூர்ணிமா...
க்ருஷ்ணனின் புல்லாங்குழல் நாதத்தில் மயங்கி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, யமுனா நதிதீரத்தில், பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில், ஆனந்தமாக க்ருஷ்ணனோடும், ராதிகாராணியோடும், நடனமாடுகிறார்கள்...
கண்ணன் ஒவ்வொரு கோபிக்கும் ஒரு கண்ணனாக ஆவிர்பவித்து அழகாய் நடனமாடுகின்றான்...
ஹே கோபிகைகளே... என்னை உங்கள் வேலைக்காரியாக வைத்துக்கொள்ளுங்கள்...
ஹே ராதே....என்னை உன்னுடைய அடிமையாக்கிக் கொள்....
க்ருஷ்ணா...என்னை இப்போதே ப்ருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்...
ராதே...ராதே...…





வேடிக்கையாகப் பார்....


ராதேக்ருஷ்ணா 

உன்னை பகவான் க்ருஷ்ணன் தன் ஒரு கையில் பத்திரமாக தூக்கிவைத்துக் கொண்டிருக்கிறான்...
உன் குடும்பத்தை இன்னொரு கையில் ஜாக்கிரதையாக வைத்திருக்கிறான்...
தன் முதுகில் உன்னுடைய எல்லாப் பொறுப்புகளையும் கெட்டியாக வைத்திருக்கிறான் ...
அதனால் உன் துன்பமோ, பிரச்சினைகளோ, வியாதிகளோ, உன்னை ஒன்றும் செய்யமுடியாது...
நீ ஜாலியாக உன் வாழ்க்கையை வேடிக்கையாகப் பார்....
க்ருஷ்ணனோடு சிரித்துப் பேசிக்கொண்டே பொழுதைப்போக்கு….

ஜெயித்துக்காட்டு...


ராதேக்ருஷ்ணா 

துன்பம் வந்தால், முகத்தைத் தொங்கப்போடாதே...மனதில் தைரியத்தைக் கைக்கொண்டு, உன்னைக் கட்டுப்படுத்தும் துன்பத்தை தூக்கில் தொங்கவிடு...
துன்பத்தை எப்படி பயமுறுத்தலாம் என்பதை நீ முடிவு செய்...
க்ருஷ்ணன் என்னும் பலமான ஆயுதம் உன்னோடு இருக்க, வீறு கொண்டு நிமிர்ந்து நின்று ஜெயித்துக்காட்டு…

சூழ்நிலை உனக்கு அடிமை...


ராதேக்ருஷ்ணா 

நீ சூழ்நிலை கைதியல்ல...
நீ தைரியமாக நம்பிக்கையோடு இருந்தால், சூழ்நிலை உனக்கு அடிமை...
எந்த சூழ்நிலையையும் நான் க்ருஷ்ணனின் அருளோடு, சமாளித்து ஜெயிப்பேன் என்கிற ஒரே ஒரு விஷயத்தை மனதில் ஆழமாக பதித்து வை...
இந்த நம்பிக்கை சத்தியமாய் உன்னை நன்றாக வாழவைக்கும்…

ஜய விஜயீ பவ …


ராதேக்ருஷ்ணா 

நிலைமைகள் மாறலாம்...
மனிதர்கள் மாறலாம்..
அதனால் என்ன ?
தேயும் நிலவும் வளர்வதுண்டு...
அஸ்தமனமான சூரியன் மீண்டும் உதிப்பதுண்டு...
நீயும் எல்லாவற்றையும் கடந்து மீண்டு வருவாய்...
க்ருஷ்ணன் என்னும் அழியாத சக்தி உன்னுள்ளே, உன்னுடனே இருக்கும்போது, யார் நீ நன்றாக வாழ்வதை தடுத்துவிடமுடியும்...
ஜய விஜயீ பவ …

தேசத்தை சுத்தப்படுத்து…

ராதேக்ருஷ்ணா ...
நீ யோசித்தது போதும்...
உன் மூளைக்கு கொஞ்சம் ஓய்வு கொடு....

நீ பயந்தது போதும்...
உன் தைரியத்திற்கு கொஞ்சம் வேலை கொடு...

உன் வன்முறையை கொஞ்சம் ஓரம் தள்ளி வை...
காந்திஜீயின் அஹிம்சைக்கு கொஞ்சம் இடம் கொடு...

உன் சந்தேகங்களை கொஞ்சம் மூட்டைகட்டி வை...
சரஸ்வதி தேவியின் அருளோடு பாகவதத்தைப் படி...

உன் அழுகையை கொஞ்சம் நிறுத்து...
க்ருஷ்ணனோடு ஆனந்தமாய் கூடியாடி சிரி...

நீ குப்பை போட்டது போதும்...
கொஞ்சம் கொஞ்சமாய் தேசத்தை சுத்தப்படுத்து…



Wednesday, October 1, 2014

நம்பிக்கை வை….


ராதேக்ருஷ்ணா ….

எதிர்பார்ப்பு வேறு..
நம்பிக்கை வேறு...
எதிர்பார்ப்பு தோற்கலாம் அல்லது ஜெயிக்கலாம்...
நம்பிக்கை ஒரு நாளும் தோற்பதில்லை...
நீ மனிதரிடம் வைப்பது எதிர்பார்ப்பு...
சமயத்தில் உன் எதிர்பார்ப்பு நடக்கலாம்.சமயத்தில் நடக்காமல் போகலாம்.
அதனால் எதற்கும் தயாராயிரு...
க்ருஷ்ணனிடம் நீ வைக்கவேண்டியது நம்பிக்கை...
எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இடம் மாறும்போது துன்பம்...
மனிதரிடம் எதிர்பார்க்காதே...
க்ருஷ்ணனிடம் நம்பிக்கை வை….

பாரமில்லாமல் இரு….


ராதேக்ருஷ்ணா ...
நீ எந்த பிரச்சனையையும் மனதில் பாரமாக ஏற்றிக்கொள்ளாதவரை உனக்கு ஒரு தொந்தரவுமில்லை. எதையும் சாதாரணமாக, லேசாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கை சுலபமாயிருக்கும். க்ருஷ்ணனிடம் உன் பிரச்சனைகளை ஒப்பவிடைத்துவிட்டு, நீ பாரமில்லாமல் இரு….

குருவை அடை


ராதேக்ருஷ்ணா 

மானமும் அவமானமும் மரணம் வரையே...
தற்பெருமையும் கொண்டாட்டமும் பணம் உள்ளவரையே...
திமிரும் அஹம்பாவமும் ஆரோக்கியம் உள்ளவரையே...
சந்தேகமும் குழப்பமும் நாமஜபம் செய்யாதவரையே...
பயமும் பரிதவிப்பும்
க்ருஷ்ணனிடம் சரணாகதி செய்யாதவரையே...
வெறுப்பும் களைப்பும் சத்சங்கத்தில் ருசி இல்லாதவரையே...
விதியும் முன்வினையும் குருவை அடையாதவரையே…


நல்லதைப் பார்….


ராதேக்ருஷ்ணா 

துன்பத்தில் நீ துவண்டு போனால், உன் இன்பத்தில் யார் திளைப்பர் ?
பிரச்சனைகளில் நீ நம்பிக்கையை இழந்தால், அதன் தீர்வை யார் அனுபவிப்பது ?
அவமானத்தில் நீ வாழ்வை வெறுத்தால், உனக்கு வரும் பெருமையை யார் கொண்டாடுவர் ?
நம்பிக்கை துரோகத்தில் நீ நொறுங்கி விட்டால், க்ருஷ்ணனின் க்ருபையை 
யார் உணர்ந்துகொள்வார் ?
துன்பம் இன்பத்தைத் சொல்லும் தூதுவன்...
பிரச்சினை தீர்வை அழைத்துவரும் தோழன்...
அவமானம் உனக்குப் பெருமையைக் கொண்டு வரும் உன் நலம் விரும்பி...
நம்பிக்கைத் துரோகிகள் உனக்குக் க்ருஷ்ணனைக் காட்டும் வழிகாட்டி...
எல்லா கெடுதல்களிலும் ஒளிந்திருக்கும் நல்லதைப் பார்….