Guru Vedham

Guru Vedham

Sunday, September 28, 2014

க்ருஷ்ணனை அனுபவிப்பாய்…


ராதேக்ருஷ்ணா 

எல்லா சமயங்களிலும் உன்னால் நிதானமாக யோசிக்கமுடியும்!
எல்லா நிலைமைகளையும் உன்னால் சமாளிக்க முடியும்!
எல்லா வித மனிதர்களோடும் உன்னால் பழகமுடியும்!
எல்லா பிரச்சினைகளுக்கும் உன்னால் தீர்வு காணமுடியும்!
எல்லா வியாதிகளையும் உன்னால் மாற்றிக்கொள்ள முடியும்...
விதிக்கு நீ இரையாகமாட்டாய்...
வீறுகொண்டு நாமஜபம் செய்.
விவேகத்தோடு த்யானம் செய்...
நீ ஞானத்தை அடைவாய்...
க்ருஷ்ணனை அனுபவிப்பாய்…

நம்பிக்கையோடு வாழ்…


ராதேக்ருஷ்ணா 

உலகில் ஒவ்வொரு நாளும் பல கோடி நல்ல விஷயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சில கெட்ட விஷயங்கள், சில கெட்ட மனிதர்களின் செய்கையைக் கொண்டு உலகைத் தவறாக நினைக்காதே.
இதே உலகில் பலர் தினமும் க்ருஷ்ணனை ப்ரத்யக்ஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதே உலகில் பலர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதே உலகில் தினமும் பலர் புதுமைகள் செய்கிறார்கள்.
இதே உலகில் பலர் தினமும் பலருக்கு உதவி செய்கிறார்கள்.
இந்த நிமிஷம் உலகில் பல ஆயிரம் கோடி நல்லவைகள் நடக்கின்றன.
அதனால் உலகில் வாழப் பயப்படாதே....
உன் வாழ்விலும் நிச்சயம் நல்லவை நடந்தது....
நடக்கின்றது....
நடக்கப்போகின்றது...
சந்தோஷமாக,தைரியமாக, நம்பிக்கையோடு வாழ்…

நிரந்தர சம்பந்தம்


ராதேக்ருஷ்ணா 

நெருங்கிப் பழகினவர்கள் திடீரென்று உன்னை வீசி எறிந்துவிட்டு சென்றால் கவலைப்படாதே. அவர்களால் உன்னை ஒதுக்க முடியுமென்றால் உன்னால் அவர்களை ஒதுக்கமுடியாதோ??? க்ருஷ்ணனோடுதான் நமக்கு நிரந்தர சம்பந்தம். மற்றவர் மாறினால் உன்னை நீயும் மாற்றிக்கொள். இதுக்குபோய் அலட்டிக்கலாமா!!!

கண்ணன் சரி செய்வான்


ராதேக்ருஷ்ணா 

குடும்பத்தில் ஒருவர் சரியாக இல்லையென்றால்,உடனே குற்றம் சொல்வதோ, வாதாடுவதோ, அவர்களது தவறை நினைத்து பயப்படுவதோ, அடுத்தவரிடம் புலம்புவதோ கூடவேகூடாது. பகவான் க்ருஷ்ணனிடம் முறையிடு. க்ருஷ்ணன் எல்லோர் உள்ளும் இருக்கிறான். சரியில்லாதவரை சரி செய்யும் பொறுப்பை க்ருஷ்ணனிடம் தைரியமாக ஒப்படைத்துவிட்டு, நீ திடமாக நாமஜபம் செய். சத்தியமாய் கண்ணன் சரி செய்வான். க்ருஷ்ணனால் மட்டுமே சரி செய்யமுடியும்.


கண்ணனோடு பேசு..


ராதேக்ருஷ்ணா 

உன்னோடு எப்பொழுதும் பேச, கண்ணன் ஆசையாய் இருக்கும்போது, நீ ஏன் உன்னை மதிக்காத மனிதரிடம் ஏங்குகிறாய் ???
அட பைத்தியமே ...
மனிதரை புரிந்து கொள்...
கண்ணனை அறிந்துகொள்...
கண்ணனோடு என்ன வேண்டுமானாலும் பேசு.... எப்படி வேண்டுமானாலும் பேசு....எவ்வளவு வேண்டுமானாலும் பேசு....
அவன் உன் வார்த்தைக்கும், உன் மனதிற்கும், உன் நேரத்திற்கும், உன் வாழ்க்கைக்கும், என்றுமே மதிப்பளிக்கிறான்….

தோற்கவே முடியாது….


ராதேக்ருஷ்ணா 

உன் வாழ்க்கை அர்த்தமுள்ளது .
உன் மனது விசேஷமானது.
உன் உடல் அற்புதமானது.
உன் எண்ணங்கள் பலமானது.
உன்னை ஒரு நாளும் தாழ்வாக நினைக்காதே...
உலகம் முழுக்க நீக்கமற நிறைந்திருக்கும் க்ருஷ்ணன் உன்னுள் பூரணமாய் இருக்கிறான். அதனால் அபரிமிதமான சக்தி உன்னுள் உண்டு. அதனால் உன் வாழ்வின் கஷ்டங்கள், பிரச்சனைகள், வியாதிகள் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளும் சக்தி உனக்குண்டு...
விடாத நாமஜபம், க்ருஷ்ணன் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை, குறையாத உற்சாகம் மூன்றுமிருந்தால் உன்னால் தோற்கவே முடியாது….

Sunday, September 21, 2014

ப்ரயோஜனம்....

ராதேக்ருஷ்ணா ...

வாழ்க்கை சில சமயங்களில் நம்மை, நம் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் விட்டு விலகி நிற்கும்படி நிர்ப்பந்திக்கிறது. அதுவும் நம்மை நாம் சுயசோதனை செய்துகொள்ளவே. ஆசைகளற்ற, எதிர்பார்ப்புகளற்ற நிர்மலமான மனதில் க்ருஷ்ணன் தெளிவாகத் தெரிகிறான். க்ருஷ்ணன் தானே நம் வாழ்வின் உண்மையான ப்ரயோஜனம்....

உன் வேலை ....

ராதேக்ருஷ்ணா ...

உன் வாழ்வைப் பற்றி பகவான் க்ருஷ்ணன் சிரத்தையோடு யோசிக்கிறார். அதனால் நீ யோசிக்கவேண்டாம்.
உன் எதிர்காலத்தைப் பற்றி க்ருஷ்ணன் அழகாக திட்டமிடுகிறார். அதனால் நீ கவலைப்படவேண்டாம்.
உன் ஆரோக்கியத்தைப் பற்றி க்ருஷ்ணன் அக்கறையோடிருக்கிறார். அதனால் நீ பயப்படவேண்டாம்.
உன் குடும்பத்தின் மீது க்ருஷ்ணன் அளவுகடந்த அன்போடிருக்கிறார்.
அதனால் நீ நிம்மதியாயிருக்கலாம்.
சரி..அப்பொழுது உனக்கு எனக்கு வேலை ?
உன் ஒரே வேலை .... க்ருஷ்ண நினைத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்வதுதான்...

Wednesday, September 17, 2014

வென்றுகாட்டு.....

ராதேக்ருஷ்ணா ...

மனது திடமாக இருந்தால் எது வந்தாலும் எதிர் கொள்ளவும், வெல்லவும் முடியும். சந்தர்ப்பங்கள் சில சமயங்களில் நமக்கு விரோதமாக இருக்கும். ஆனால் மனமிருந்தால் மார்க்கமுண்டு.
அதற்கு என்ன மனம் வேண்டும் ? "என்னோடு என் கண்ணன் உண்டு; ஒரு நாளும் அவன் என்னை தோற்கவிடமாட்டான்; என் உழைப்பும், நம்பிக்கையும் வீண்போகாது; நான் ஜெயித்தே தீருவேன்" என்ற மனமிருந்தால் நிச்சயமாக சரியான மார்க்கம் தெளிவாய் தெரியும்...
கலங்காதே! வென்றுகாட்டு.....


Tuesday, September 16, 2014

கோகுலாஷ்டமி ...


ராதேக்ருஷ்ணா 

இன்னும் ஒரு கோகுலாஷ்டமி ...
நாம் பாக்கியவான்கள்....
ஆம்...இன்று கோகுலாஷ்டமி...
நமக்காக நம் கண்ணன் எத்தனை முறை அவதரிக்கிறான்...கருணாமூர்த்தி ....
உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன் என்றே கொண்டாடி, 
கூடியிருந்து குளிர்வோம்….


குதூகலமாய் கொண்டாடுவோம் ….


ராதேக்ருஷ்ணா ...
இன்றும் ஒரு க்ருஷ்ண ஜெயந்தி. க்ருஷ்ணன் எத்தனை முறை பிறந்தாலும் ஆனந்தமே. அல்ப மனிதருக்கே நக்ஷத்திர பிறந்தநாள், பிறந்த தேதி என்று இரண்டு கொண்டாடும்போது, நம் கண்ணனுக்கு கொண்டாடக்கூடாதோ ?!? யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நாம் நம் கண்ணனின் பிறந்தநாளை பக்தி வெண்ணெயோடும், ஆனந்த கும்மியோடும், நாமஜப கோலாட்டத்தோடும், குதூகலமாய் கொண்டாடுவோம் ….



பைத்தியமாயிரு....


ராதேக்ருஷ்ணா 

சில சமயங்களில் ஊமையாயிரு...
சில இடங்களில் செவிடாயிரு...
சில சந்தர்ப்பங்களில் குருடாயிரு...
சில விஷயங்களில் குழந்தையாயிரு...
சில மனிதர்களிடத்தில் ஜடமாயிரு...
சில நேரங்களில் முட்டாளாயிரு...
சில காரியங்களில் புத்திசாலியாயிரு...
க்ருஷ்ணனிடத்தில் பைத்தியமாயிரு....
இது தான் வாழ்வை வெல்ல சுலபமான வழி…

கண்ணனுக்காக வாழ்ந்துபார்...


ராதேக்ருஷ்ணா ...
மனிதர்கள் நம்மை அவர்கள் காரியத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டு மறந்துவிடுவர். ஆனால் கண்ணன் நமக்கு செய்யவேண்டியதை செய்துவிட்டு, தான் செய்ததை மறந்துவிடுவான். நம்மை ஒரு நாளும் மறக்காதவன், மறுக்காதவன் கண்ணனே... அவனுக்காக வாழ்க்கையை வாழ்ந்துபார்.

குறையொன்றுமில்லையடா விட்டலா...


ராதேக்ருஷ்ணா ...
விட்டலன் இருக்கிறான் நம்மோடு ! கருணையினால் நம் வாழ்க்கையை அழகாய் நடத்துகிறான். குறையொன்றுமில்லையடா விட்டலா... உன் நினைவோடு வாழ்வோம் ஆனந்தமாக ….

ப்ரார்த்தனை


ராதேக்ருஷ்ணா 

"எனக்கு ஒன்றும் தெரியாது க்ருஷ்ணா... எனக்கு ஒன்றும் புரியவில்லை க்ருஷ்ணா...
எனக்கு எது நல்லதோ அதை நீ செய் க்ருஷ்ணா...
நான் உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்... உன்னிடத்தில் என்னை தந்துவிட்டேன்... இனி என் வாழ்க்கை , என் எதிர்காலம், என் நிம்மதி, என் ஆனந்தம் எல்லாம் உன் பாடு" என்று ப்ரார்த்தனை செய்துவிட்டு நிம்மதியாக இரு… 

Wednesday, September 10, 2014

குதூகலமாய் வாழ்....


ராதேக்ருஷ்ணா ...
வாய் விட்டு சிரி. க்ருஷ்ணனின் கண்ணாமூச்சி விளையாட்டாக உன் வாழ்வைப் பார். அவன் விதவிதமாக விளையாட்டு காட்டிவிட்டு கடைசியாக உன்னை ஜெயிக்கவைப்பான். தான் தோற்றாலும் தோற்பானே ஒழிய, நம்மை ஒரு நாளும் தோற்கவிடமாட்டான். கலகலப்பாய் குதூகலமாய் வாழ்.... 

Tuesday, September 9, 2014

வெல்வாய்...

ராதேக்ருஷ்ணா ...
பக்தி ஒருநாளும் உன்னை கீழே தள்ளாது. நாமஜபம் ஒரு நாளும் உன்னை ஏமாற்றாது.
உன் ப்ரார்த்தனை ஒரு நாளும் வீண்போகாது.
க்ருஷ்ணன் மேல் நீ வைத்த நம்பிக்கை ஒரு நாளும் தோல்வி அடையாது.
நீ எல்லாவற்றையும் கடந்து வெல்வாய்....

காத்திரு


ராதேக்ருஷ்ணா ...
பக்தரின் ப்ரார்த்தனைக்கான பலன் சில சமயம் காலம் தாழ்ந்துபோகலாம். ஆனால் பலனில்லாமல் போகவே போகாது. காத்திரு. காத்திருத்தல் என்பது, பகவானின் அருளை அனுபவிக்க தயாராவாதாகும்.

Sunday, September 7, 2014

உன் மனம் லேசாகட்டும்...


ராதேக்ருஷ்ணா ...
உன்னுள்ளே நடக்கும் மாற்றம் எல்லாம் கண்ணனே நன்கறிவான். அதனால் உன் எண்ணங்களை எல்லாம் கண்ணனுக்கு அர்ப்பணித்துவிடு. அவன் அதில் தவறானதை எல்லாம் சரிசெய்வான். உன் மனதை இன்னும் பலப்படுத்துவான். உன் எண்ணங்களை மாற்றும் சக்தி கண்ணனுக்கே உண்டு. உன் மனம் லேசாகட்டும்...

நிச்சயமாக வருவான்


ராதேக்ருஷ்ணா ...
உனக்கு உதவி செய்ய யாருமில்லை என்ற எண்ணமே வேண்டாம். நீ எப்பொழுது கூப்பிட்டாலும் ஓடி வந்து உதவிசெய்ய உன் க்ருஷ்ணன் இருக்கான்.
திரௌபதி கூப்பிட்டவுடன் ஓடிவந்தவன், கஜேந்திரன் கத்தியவுடன் பறந்து வந்தவன், ப்ரஹ்லாதனுக்காக தூணைப் பிளந்துகொண்டு வந்தவன் உனக்காக வரமாட்டானா?!?! 
சத்தியமாய், நிச்சயமாக வருவான் 



விசேஷ லீலை


ராதேக்ருஷ்ணா ...
உன்னை எதிர்க்கவோ, உன்னோடு வாக்குவாதம் செய்யவோ, உன்னை பரிகாசம் செய்வதற்கோ ஆளில்லை என்றால் நீ வாழ்வை உள்ளபடி அறியவும்மாட்டாய். ஜெயிக்கவும் மாட்டாய். நீ கிணற்றுத் தவளையாகி விடக்கூடாது என்பதற்காகவே க்ருஷ்ணனின் விசேஷ லீலையே எதிர்ப்பு, பரிகாசம், வாக்குவாதம் எல்லாம் ...

Thursday, September 4, 2014

வெல்வாய் ...


ராதேக்ருஷ்ணா ...
போராடும் குணம் உனக்கிருந்தால், உன்னை நீ வெல்லலாம். தன்னோடு போராடி ஜெயிப்பவரிடம், உலகம் தானாக அடங்கும். க்ருஷ்ணன் கீதையில் உன்னோடு நீ போராடி ஜெயிக்கும் வழியையே சொல்லித்தருகிறான். உன்னையே நீ வெல்வாய் ...

Tuesday, September 2, 2014

பிடிவாதம் பிடி...


ராதேக்ருஷ்ணா ...

நிறைய பிடிவாதம் உனக்கு உண்டு. நல்ல விஷயங்களில் பிடிவாதம் உன் வாழ்வை உயர்த்தும்.
வாழ்வில் ஜெயிக்கவேண்டும்,
பயத்தை வெல்லவேண்டும், ஆரோக்கியமாய் வாழவேண்டும், குடும்பத்தைக் காக்கவேண்டும், 
நன்றாய் படிக்கவேண்டும்,
போன்ற பிடிவாதங்கள் என்றும் நல்லவையே.
ராதா ராணியைப் போல் க்ருஷ்ணனை அடையும் பிடிவாதம் உயர்ந்தது. க்ருஷ்ணனை அனுபவிக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடி....
நிறைய நாமஜபம் வர பிடிவாதம் பிடி....
நிறைய க்ருஷ்ண லீலைகள் அனுபவிக்கப் பிடிவாதம் பிடி...
சத்குரு ஆணைப்படி வாழ பிடிவாதம் பிடி...

குதூகலமாய் இரு....

ராதேக்ருஷ்ணா ...
உலகம் முழுவதும் உனக்கு சொந்தமே. நீ ஈரேழு 14 லோகத்திற்கும் ராஜாதி ராஜா பகவான் ஶ்ரீ க்ருஷ்ணனின் தவப்புதல்வன்/தவப்புதல்வி. இதை மறவாதே. 
அதனால் நீ புலம்பலாமா? அழலாமா? பயப்படலாமா?கலங்கலாமா?
நீ இளவரசன்/இளவரசி ...
குதூகலமாய் இரு....


மன்னித்துவிட்டான்...


ராதேக்ருஷ்ணா ...
உன்னையே நீ நொந்துகொள்ளாதே. தவறு செய்வது மனித இயல்பு. தவற்றை திருத்திக்கொள்வதும், மீண்டு வருவதும் மனிதரின் கடமை. நடந்ததையே நினைத்திருப்பது முட்டாள்தனம். போனது போகட்டும். புதியதாய் வாழ்வைத் தொடங்கு...க்ருஷ்ணன் உன் தவறை மன்னித்துவிட்டான்...